“நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும்”.. முகெனை இப்டி அசிங்கப்பட வச்சிட்டீங்களே அபி!

பிக் பாஸ் வீட்டில் மறுபடியும் ஒரு காதல் நாடகம் ஆரம்பமாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர் அபிராமி, சக போட்டியாளரான முகெனிடம் திரும்பவும் தனது காதலை சொல்லியிருக்கிறார்.

இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பிக் பாஸ் வீட்டில் பல காதல் நாடகங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் வரை கவின், லாஸ்லியா, சாக்ஷி இடையேயான முக்கோண காதல் கதை தான் வீட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.

இந்த காதலால் பிக் பாஸ் வீடே இரண்டானது. லாஸ்லியாவுக்கும், சாக்ஷிக்கும் இடையே சக்களத்தி சண்டையே நடந்தது. ஒருபக்கம் சாக்ஷி அழுது புலம்ப, மறுபக்கம் கவின் சாக்ஷிக்கு கவுன்டர் கொடுக்க, இன்னொரு பக்கம் லாஸ்லியா கோவித்துக்கொள்ள என முக்கோண காதல் கதை பரபரப்பான கட்டத்தை எட்டியது.

மீண்டும் நண்பர்கள்:

மீண்டும் நண்பர்கள்:

திடீரென அந்த காதல் க்ளைமாக்சே இல்லாமல் பாதியில் அறுந்து போனது. இப்போது பிக் பாஸ் வீட்டில், சாக்ஷியும் கவினும் பேசிக்கொள்வதே இல்லை. அதேவேளையில் லாஸ்லியா, கவின் உறவில் எந்த பாதிப்பும் இல்லை. இப்போதைக்கு இருவரும் நண்பர்கள் மட்டுமே எனச் சொல்லி பழகி வருகின்றனர்.

பழைய ரூட்டு:

பழைய ரூட்டு:

இதற்கிடையே சரவணன் வெளியேற்றத்தால் காதல் பிரச்சினை திசை திருப்பப்பட்டது. இரண்டு நாட்களாக அதை பற்றி தான் ஊரெங்கும் பேச்சாக இருந்தது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இமேஜுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதை உணர்ந்த பிக் பாஸ் தற்போது பழைய ரூட்டுக்கே திரும்பியிருக்கிறார்.

அபி-முகென்:

அபி-முகென்:

தற்போது பிக் பாஸ் வீட்டில் அபிக்கும், முகெனுக்கும் இடையேயான நட்பு அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தனை நாட்கள் அபியை தோழியாக நினைத்து மட்டுமே பழகி வருகிறார் முகென். இரு தினங்களுக்கு முன்பு சாக்ஷி லேசாக சிண்டு முடிந்துவிட்ட போது, முகெனுக்கும், அபிராமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

முகென் கோபம்:

முகென் கோபம்:

அபி அழுது புலம்பியதால் கோபப்பட்ட முகென், கட்டிலை கையால் குத்தி உடைத்தார். அதன் பின்னர் அபிக்கு அட்வைஸ் செய்த முகென், தங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என எடுத்துரைத்தார். வெளியில் தனக்காக ஒரு பெண் காத்துக்கொண்டிருப்பதாகக் கூறிய முகென், அவரை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாகக் கூறினார். அப்போது தலையை ஆட்டிய அபி, மீண்டும் தனது காதல் உணர்ச்சிகளை கொட்டத் தொடங்கியிருக்கிறார்.

திரும்பவுமா?

திரும்பவுமா?

காலை வெளியான இரண்டாவது புரொமோவில், முகெனிடன் அபி "ஐ லவ் யூ " சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதை முகென் உடனடியாக ஏற்பதாக தெரியவில்லை. போன வாரம் போல் இந்த வாரமும் ஒரு காதல் நாடகத்தை அரங்கேற்றி நிகழ்ச்சியை ஓட்ட பிக் பாஸ் முடிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

கவின் ஆர்மி:

கவின் காதல் பிரச்சினையில் சிக்கி இருந்தபோது, சமூகவலைதளங்களில் தர்ஷன் மற்றும் முகெனின் ஆர்மியினர் பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு கலாய்த்து வந்தனர். தற்போது முகெனும் காதல் பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளதால், கவின் ரசிகரான இவர் சந்தோசமாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X