17வது போட்டியாளர் ரெடி.. லாஸ்லியாவுக்குப் போட்டியாக செம்பாவைக் களமிறக்கும் பிக் பாஸ்!

பிக் பாஸ் வீட்டின் அடுத்த போட்டியாளராக ஆல்யா மானஸா வர இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Alya Manasa Entry : பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் செம்பா- வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக ராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானஸா களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நான்காவது வாரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்க நாளன்று 15 போட்டியாளர்களைக் கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அதற்கு மறுநாள் 16வது போட்டியாளராக மீரா மிதுன் வீட்டிற்குள் சென்றார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே தன்னிடம் 17 அட்டைகள் இருப்பதாகவும், எனவே இம்முறை 17 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றும் கமல் மறைமுகமாகத் தெரிவித்திருந்தார். அதில், ஏற்கனவே 16 போட்டியாளர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். அவர்களில் இரண்டு பேர் வீட்டை விட்டும் வெளியேறி விட்டனர்.

17வது போட்டியாளர்:

17வது போட்டியாளர்:

எனவே, வரும் வாரங்களில் அந்த 17வது போட்டியாளர் வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் விஜய் டிவி பிரபலங்கள் இரண்டு பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுண்டு. அந்த வகையில் இம்முறை கவின் மற்றும் சாண்டி கலந்து கொண்டுள்ளனர் என மக்கள் கருதி வந்தனர். ஆனால், அது தவறான கணக்காம்.

ஆல்யா மானஸா:

ஆல்யா மானஸா:

17வது போட்டியாளராக வீட்டிற்குள் வருபவரும் விஜய் டிவி பிரபலம் தான். அது வேறு யாருமல்ல, ராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானஸா தான் எனக் கூறப்படுகிறது. இதற்காகத்தான் நல்ல டிஆர்பியோடு ஓடிக் கொண்டிருந்த அந்த சீரியலை அவசர அவசரமாக முடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரைவில் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாஸ்லியாவுக்கு போட்டி:

லாஸ்லியாவுக்கு போட்டி:

ஆல்யா நன்றாக நடனம் ஆடக்கூடியவர். ஏற்கனவே அவருக்கு ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். எனவே அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நிச்சயம் லாஸ்லியாவிற்குத் தான் போட்டியாக இருக்கும். ஆனால், ஆல்யா ஏற்கனவே ராஜா ராணி சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் வரும் சஞ்சீவைக் காதலித்து வருகிறார். இது ஊரறிந்த கதை தான் என்பதால், பிக் பாஸ் வீட்டில் அவரை வைத்து காதல் கதை எதுவும் பண்ண முடியாது.

பவர்ஸ்டார்:

பவர்ஸ்டார்:

ஏற்கனவே 17வது போட்டியாளராக ஸ்ரீரெட்டி வருகிறார், பவர்ஸ்டார் வருகிறார் என ஏகப்பட்ட பிரபலங்களின் பேர் இணையத்தில் வலம் வருகிறது. தற்போது அந்தப் பட்டியலில் ஆல்யாவின் பெயரும் சேர்ந்து விட்டது. அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் வரை எதுவுமே உறுதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X