அழுது புலம்பிய அபி.. கடுங்கோபத்தில் முகென்.. ஒரே குத்தில் உடைந்தது கட்டில்.. பிக் பாஸ்ல் பரபரப்பு!

முகென் கோபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கட்டிலை உடைப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை: கடும் கோபத்தில் இருந்த முகென், பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒரு கட்டிலை தனது கையால் அடித்து உடைத்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியில் இருந்து நடிகை ரேஷ்மா நேற்று வெளியேற்றப்பட்டார். சாக்ஷி தான் வெளியே அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரேஷ்மா எவிக்ட்டானது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

பிக் பாஸ் செய்தது நியாயமே இல்லை என ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதளப்பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முகென் கோபம் :

முகென் கோபம் :

இந்நிலையில் ரேஷ்மாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் முகென். பிக் பாஸ் வீட்டில் அவர்கள் இருவரும் அம்மா, மகனாகவே பழகினர். கடந்த வாரம் விளையாட்டாக ரேஷ்மாவை முகென் நாமினேட் செய்தார். ஆனால், விளையாட்டு வினையாகி ரேஷ்மா வெளியேறியதால், முகென் கடும் மன வருத்தம் அடைந்துள்ளார்.

அடுத்த பிரச்சினை:

அடுத்த பிரச்சினை:

இதனால் ஏற்கனவே சோகத்தில் இருந்த முகெனிடம், சாக்‌ஷியும், அபிராமியும் வேறொரு பிரச்சினையைக் கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பலமுறை தன் கோபத்தைக் காட்டியுள்ளார் முகென். நேற்று அதில் இன்னும் ஒரு படி மேலேச் சென்று, கடுங்கோபத்தில் தனது கையால் ஒரு கட்டிலை அடித்து உடைத்துள்ளார். நேற்றைய நிகழ்ச்சி முடியும் போது, கடைசியாக இந்த காட்சி காண்பிக்கப்பட்டது.

ரேஷ்மா வெளியேறிய சோகம்:

ரேஷ்மா வெளியேறிய சோகம்:

முகென் ஏன் இப்படி கோபப்பட்டு கட்டிலை உடைத்தார் என்பது விளக்கப்படவில்லை. எனினும், ரேஷ்மாவை கடந்த வாரம் தான் நாமினேட் செய்தது பெரிய தவறு என வருந்தி வருகிறார் முகென். நேற்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோது முகென் கதறி அழுதுவிட்டார். தன்னால் தான் ரேஷ்மா வெளியேற்றப்பட்டு விட்டதாக நினைத்து குற்ற உணர்ச்சியில் தவித்தார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

தன் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவே கட்டிலை அவர் அடித்து உடைத்திருக்கிறார் என தெரிகிறது. ஆனால் காலையில் வெளியான முதல் புரொமோவில், சாக்ஷியுடன் முகென் உட்கார்ந்திருப்பதற்காக அபிராமி பீல் செய்து அழுகிறார். இந்த வாரம் இவர்களுக்கு இடையிலான முக்கோண காதல் நாடகம் பிக் பாஸ் வீட்டில் அரங்கேறும் என தெரிகிறது. எனவே இதன் ஒருபகுதியாகக் கூட முகென் கட்டிலை உடைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இரவு விடை தெரியும் :

இரவு விடை தெரியும் :

இந்த யூகங்களுக்கு எல்லாம் சரியான பதில், இன்று இரவு ஒளிபரப்பப்படும் எபிசோடில் தான் கிடைக்கும். முகென் ஏன் அவ்வாறு நடந்துகொண்டார், அதற்காக பிக் பாஸ் அவருக்கு ஏதேனும் தண்டனை கொடுத்தாரா? அல்லது முகெனுக்கு கையில் காயம் ஏதும் ஏற்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்று விடை கிடைக்கிறதா என பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X