அய்யயோ.. சேரனுக்கு என்னாச்சு .. இப்டி விழுந்து கிடக்குறாரே.. பிக் பாஸில் இருந்து வெளியே போய்டுவாரோ?
சேரனுக்கு டாஸ்க்கால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் புரொமோவில் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: டாஸ்க் ஒன்றில் விளையாடிய போது சேரனுக்கு காயம் ஏற்பட்டு, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் இன்றைய புரொமோவில் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஏதாவது ஒரு பரபரப்பான சம்பவத்தை வைத்து டிஆர்பியை ஏற்றி விடுகிறார்கள். காலையில் இருந்தே மக்களுக்கு அன்றைய எபிசோடைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் அவர்கள், மூன்று புரொமோக்களை வெளியிடுகின்றனர்.
அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் டாஸ்க் ஒன்றில் சேரன் அடிபட்டு கீழே படுத்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சரவணன் வெளியேற்றம்:
ஏற்கனவே, சரவணனின் அதிரடி வெளியேற்றம், அதனால் அழுத போட்டியாளர்கள் என கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் வீடு அல்லோகலப் பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக போட்டியாளர்களுக்கு ஜாலியான டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்திருக்கிறார் போலும். போட்டியாளர்களும் ஆர்வமுடன் இந்த டாஸ்க்கை விளையாடுகின்றனர்.

கில்லர் காயின் டாஸ்க்:
இதில் கில்லர் காயின் யாரிடம் இருக்கிறதோ அவர்களது மதிப்பெண்கள் பாதியாக குறைக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் இரண்டு இரண்டு பேராக சேர்ந்து இந்த டாஸ்க்கை விளையாடுகின்றனர். அப்போது ஒருவரை ஒருவர் துரத்துகின்றனர். எதிராளியிடம் இருந்து தப்பிக்க மற்ற போட்டியாளர்கள் கண்மண் தெரியாமல் ஓடுகின்றனர்.

சேரன் :
இதில் முதலில் வீட்டுக்குள் சாண்டி விழுகிறார். ஆனால், அவருக்கு காயம் ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், சேரனுக்கு எப்படியோ காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் கீழே விழுந்து விட்டாரா அல்லது அதிகம் ஓடியதால் மூச்சிரைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளாரா எனத் தெரியவில்லை.

முதல் புரொமோ:
கார்டன் ஏரியாவில் சேரன் படுத்திருக்க, அவரைச் சுற்றி சக போட்டியாளர்கள் அமர்ந்திருக்கின்றனர். டாஸ்க்கிற்காக போட்டிருந்த கோட்-ஐ கழற்றி விட்டு, மைக்கை எல்லாம் கழற்றி வைத்து விட்டு படுத்திருக்கிறார் அவர். நிச்சயம் அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டிருக்காது எனத் தெரிகிறது. அப்படி இருந்திருந்தால், சுற்றியிருக்கும் போட்டியாளர்கள் அழுவது போன்ற காட்சிகளை டிஆர்பிக்காக நிச்சயம் புரொமோவிலேயே காட்டி இருப்பார்கள்.

பரபரப்பு:
எனவே, இது லேசான காயமாகத்தான் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனாலும், இதனைக் காரணம் காட்டி சேரனை பிக் பாஸில் இருந்து வெளியேற்றி விடுவார்களோ என்பதே அவரது ரசிகர்களின் பெரும் கவலையாக இருக்கிறது. எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என அதிரடியாக பல டிவிஸ்ட்டுகளை வைத்து வருகிறார் பிக் பாஸ். எனவே, சேரனை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விடக் கூடாது என்பதே பலரது பிரார்த்தனையாக உள்ளது. பார்ப்போம் அடுத்த புரொமோக்களில் என்ன வருகிறது என்ன?


Click it and Unblock the Notifications











