எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இந்த வாரமும் ஷாக் தரும் பிக் பாஸ்.. யார் வெளியே போறாங்க தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Meera Eliminate? : மீராவை வெளியேற்றும் பிக் பாஸ்

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி ஐந்து வாரம் நிறைவடைய உள்ளது. முதல் வாரம் யாரும் வெளியேற்றப்பட வில்லை. இரண்டாவது வாரம், முதல் போட்டியாளராக வீட்டுக்குள் சென்ற பாத்திமா பாபு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதற்கு அடுத்த வாரம் மோகன் வைத்யா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் கண்டெண்ட் குயினாக வலம் வந்த வனிதா வெளியேற்றப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் மோகன் வைத்யா வீட்டை விட்டு வெளியேறினார்.

காரசார நிகழ்வுகள்

காரசார நிகழ்வுகள்

இன்று சனிக்கிழமை என்பதால், கமல் வருவார். இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த காரசார நிகழ்வுகள் பற்றி போட்டியாளர்களுடன் அவர் உரையாற்றுவார். பின்னர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் யார் யாரெல்லாம் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அறிவிப்பார்.

புதிய போட்டியாளர்

புதிய போட்டியாளர்

இதுவரை ஞாயிற்றுக்கிழமை எபிசோட்களில் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்களை கமல் அறிவித்துள்ளார். நிகழ்ச்சி தொடங்கி ஐந்து வாரமாகி விட்டது. ஏற்கனவே மூன்று போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இந்த வாரம் நான்காவது போட்டியாளர் வெளியேற்றப் படுகிறார். எனவே, இந்த வாரம் வைல்ட் கார்ட்டில் புதிய போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவிக்ஷன் பட்டியல்

எவிக்ஷன் பட்டியல்

இது உண்மையென்றால், இன்றே ஒரு போட்டியாளரை எவிக்சன் செய்து விடுவார்கள் எனத் தெரிகிறது. நமக்குக் கிடைத்த தகவலின்படி, இந்த வாரம் சாக்‌ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் எனத் தெரிகிறது. இந்த வாரம் எவிக்சன் லிஸ்ட்டில் சேரன், சரவணன், கவின், மீரா, அபிராமி மற்றும் சாக்‌ஷி பெயர் உள்ளது.

வெளியேறப்போவது யார் ?

வெளியேறப்போவது யார் ?

இவர்களில் மீரா தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், தற்போதைக்கு பிக் பாஸ் வீட்டில் கண்டெண்ட் குயினாக வனிதாவின் இடத்தை அவர் தான் நிரப்பி வருகிறார். எனவே, அவ்வளவு சீக்கிரத்தில் அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற மாட்டார். இதனால் இந்த வாரம் அபிராமி அல்லது சாக்‌ஷி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

வெளியேறும் சாக்ஷி

வெளியேறும் சாக்ஷி

அதிலும் குறிப்பாக சாக்‌ஷி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை பட ரிலீசுக்குப் பிறகு தான் அபிராமி வெளியில் அனுப்பப்படுவார் எனத் தெரிகிறது. சாக்‌ஷிக்கும் மக்களிடையே நல்ல பெயரில்லை. ஆனால் மீராவுக்கு பதில் சாக்‌ஷி இந்த வாரம் வெளியேறுகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X