பெண்கள் விவகாரம் மட்டும் காரணமல்ல.. எல்லாம் சேரன் எபெக்ட்.. சரவணன் அதிரடியாக எவிக்ட் ஆனதன் பின்னணி!
சரவணன் அதிரடியாக பிக் பாஸில் இருந்து வெளியேற்றப் பட்டதன் பின்னணியில் சேரனின் ராசி இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களைப் பற்றி கமல் பேசிக் கொண்டிருந்த போது, தானும் தனது கல்லூரிக் காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாகத் தெரிவித்தார். இதைக் கேட்டு அப்போது கமலும் சிரித்தார், அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்தனர்.
ஆனால், இந்த விவகாரம் பின்பு பூதாகரமாக வெடித்தது. அதெப்படி பெண்களை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்துவதாகக் கூறியதைக் கேட்டு, ஒரு கட்சித் தலைவரான கமல் அமைதியாகப் போகலாம் என ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் கண்டனங்கள் எழுந்தன.

மன்னிப்பு கேட்ட சரவணன் :
விவகாரம் பெரிதாவதை உணர்ந்த பிக் பாஸ் உடனடியாக சரவணனை கன்பெக்சன் ரூமுக்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தார். இதனால் அப்போதைக்கு அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்களும் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரச்சினைகளால், அதனை மறந்து விட்டனர்.

அதிரடியாக வெளியேற்றம் :
இந்நிலையில், நேற்று அதிரடியாக சரவணனை கன்பெக்சன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ் இது தொடர்பாக அவரிடம் பேசினார். அப்போது, இந்த விவகாரத்தை அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க முடியாது எனவும், உடனடியாக சரவணனை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அனுப்புவதாகவும் பிக் பாஸ் தெரிவித்தார்.

மக்கள் அதிர்ச்சி :
இதைக் கேட்டு சரவணன் அதிர்ச்சி அடைந்தாரோ இல்லையோ மக்கள் ரொம்பவே அதிர்ச்சி அடைந்தனர். நேற்று தான் ரேஷ்மா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த வார நாமினேசனில் கூட சரவணன் பெயர் இல்லை. அப்படியிருக்கையில் அவசர அவசரமாக இரவு நேரத்தில் கன்பெக்சன் ரூம் வழியாக சரவணனை வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்தது.

இயக்குனர் சேரன் :
இது ஒருபுறம் இருக்க, பிக் பாஸின் செல்லப்பிள்ளையாக சேரன் இருக்கிறாரோ என்றொரு சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சேரனை பகைப்பவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டு வருவதே அதற்குக் காரணம். பிக் பாஸ் வீட்டில் சேரனை பகைத்த மூன்றாவது நபர் தற்போது வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

மீரா வெளியேற்றம்:
முதலில், மீரா மிதுன். இவர் கிராமம் டாஸ்க்கின் போது சேரன் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக மோசமான புகார் ஒன்றை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் சேரன் அழுததால், பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாக மக்கள் ஒன்றாக கூடினர். அந்த வாரம் மீரா வெளியே அனுப்பப்பட்டார். அப்போது தான், பெண்கள் பற்றி கமல் முன்னிலையில் சரவணன் தரக்குறைவாகப் பேசினார்.

ரேஷ்மா வெளியேற்றம்:
அதனைத் தொடர்ந்து கிராமம் டாஸ்க்கின் போது தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறி, சேரனை ரேஷ்மா நாமினேட் செய்தார். அதோடு அந்த வாரம் அவரும் சேரனிடம் மரியாதைக் குறைவாகவே நடந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறன்று நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

சேரனுடன் பிரச்சினை:
இந்நிலையில் கடந்த 27ம் தேதி சரவணன் பேசியதற்காக நேற்று நிகழ்ச்சியில் இருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப் பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக அவர் கூறியது தான் காரணமாகக் கூறப்பட்டாலும், கடந்த வாரம் அவருக்கும் சேரனுக்கும் இடையே ஒரு பிரச்சினை உண்டானது இங்கே நினைவுகூரத் தக்கது.

ரெட் கார்டு:
அப்போது சேரனை மரியாதைக்குறைவாக நடத்தினார் என்ற புகாரும் சரவணன் மீது எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், கமல் அறிவுரை கூறி, அவரை சேரனிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். சரவணனும் சேரனின் காலில் விழ முயற்சித்ததால் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.

சேரன் ராசி:
இந்த சூழ்நிலையில் தான், சரவணன் அதிரடியாக பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். எனவே, சேரனை எதிர்த்த ராசியால் தான் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டிருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. நேற்று யாருக்கும் தெரியாமல் சரவணன் பிக் பாஸில் இருந்து வெளியேறி விட்டார். இன்று தான் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் ரியாக்சன் என்ன என்பது தெரியும்.


Click it and Unblock the Notifications











