வில்லின்னு நெனச்சா நாடோடிகள் சசிகுமாரா மாறிடிச்சே, கஸ்தூரிக்காக புலம்பும் நெட்டிசன்ஸ்
நடிகை கஸ்தூரி நாடோடிகள் சசிகுமார் ரேஞ்சுக்கு லாஸ்லியா, கவின் காதலின் தூதுவராக மாறிவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
சென்னை: லாஸ்லியா மற்றும் கவினுக்கு வில்லியாக இருப்பார் என பார்த்தால், நடிகை கஸ்தூரி நாடோடிகள் சசிகுமார் ரேஞ்சுக்கு மாறிவிட்டதாக நெட்டிசன்கள் புலம்புகின்றனர்.
கஸ்தூரியின் வருகையால் பிக் பாஸ் வீடே களைக்கட்டி இருக்கிறது. இத்தனை நாட்கள் சோகாட்சி காவியமாக இருந்த பிக் பாஸ் வீட்டை கலகலவென மாற்றியிருக்கிறார் அவர்.
சாக்ஷியை தலைக்கீழாக நிற்கவிட்டது, ஷெரீனை தோப்புகரணம் போட வைத்தது, மதுமிதாவை தர்ஷனுக்கு குடைப்பிடிக்க வைத்தது, கவினை மூக்கால் மன்னித்துவிடு என எழுது வைத்தது என முதல் நாளே ரணகளப்படுத்திய கஸ்தூரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முதல் புரொமோ
இந்நிலையில் இன்று காலை வெளியான முதல் புரொமோவில் கவினை நாக்கை பிடுங்கி கொள்வது போன்று கேள்விக்கேட்டு அசிங்கப்படுத்தினார் கஸ்தூரி. கவினை வடிவேலுவுடன் ஒப்பிட்டு காமெடி பீசாக மாற்றினார்.

உடைந்த எதிர்பார்ப்பு
கஸ்தூரியின் இந்த கேள்வி பிக் பாஸ் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இன்றைய எபிசோடில் நிச்சயம் கவினை போட்டு தாக்கப்போகிறார் கஸ்தூரி என எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பை உடைத்திருக்கிறது இரண்டாவது புரொமோ.

கஸ்தூரியின் வில்லுப்பாட்டு
'கவினின் பெயர் வின் இருந்தாலும், அவரது மனதில் லாஸ் தான் இருக்கிறார்' என எதுகை மோனையாக பேசி காதல் வில்லுப்பாட்டு பாடுகிறார் கஸ்தூரி. இதைக்கேட்டு சாக்ஷியின் முகம் சூடான எண்ணெயில் போட்ட கடுகு போல் வெடிக்கிறது.
நாடோடிகள் சசிகுமார்
"முதுல் புரொமோவை பார்த்துட்டு கஸ்தூரி அக்கா லாஸ்லியாவுக்கும், கவினுக்கும் வில்லியாக இருப்பார்னு நினைச்சேன். ஆனா இரண்டாவது புரொமோவை பார்த்தா, நாடோடிகள் படத்துல வரும் சசிகுமார் ரேஞ்சுக்கு காதலை சேர்த்து விடுறாங்களே", என கவலை பட்டுள்ளார் இவர்.

கஸ்தூரியின் ஸ்டாடர்ஜி
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை நுணுக்கமாக பார்த்தால் கஸ்தூரியின் ஸ்டாடர்ஜி நன்றாக புரியும். நேற்று வந்ததும் வராததுமாக அவர் செய்த வேலைகள் மக்களிடையே நல்லப் பெயரை பெற்று தந்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கவனித்து வரும் கஸ்தூரி, அவ்வளவு எளிதில் பெயரை கெடுத்துக்கொள்வாரா என்ன?


Click it and Unblock the Notifications











