For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓஹோ... ரேஷ்மா பலிகடா ஆனதற்கு இது தான் காரணமா... என்ன பிக் பாஸ் இப்டி பண்ணிட்டீங்க..!

|
Bigg Boss 3 Tamil : Highlights :குட்டையை கிளப்பிய Kamal-வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரேஷ்மா வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் என்பது ஒரு ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சி. தமிழில் முதல் சீசன் மட்டுமே ரியாலிட்டி ஷோவாக இருந்தது. காரணம் இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டது எனத் தெரியாமலேயே அதில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், அடுத்த இரண்டு சீசன்களும் புனையப்பட்ட நிகழ்ச்சியாகவே காட்சி அளிக்கிறது. போட்டியாளர்கள் மிகவும் உஷாராகவே விளையாடுகின்றனர். யாரும் தங்களது முகமூடியை அவ்வளவு சுலபமாக கழட்டவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. சட்டப்படியாக நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட பிறகே, ஒருவர் போட்டியாளராக தேர்வு செய்யப்படுகிறார்.

பரம ரகசியம்:

பரம ரகசியம்:

இந்த ஒப்பந்தங்களில் மிகவும் முக்கியமானது 'டிஸ்க்ளோசர் (disclosuer) ஒப்பந்தம்'. அதாவது, உள்ளே நடக்கும் எந்த விஷயத்தையும் வெளியில் பேசக்கூடாது என்பதே அது. இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எந்தவொரு போட்டியாளரும் வெளிப்படையாக பல விசயங்களைப் பேசுவதில்லை.

சாமர்த்திய விளையாட்டு:

சாமர்த்திய விளையாட்டு:

ஆனால் நிச்சயம் ஒவ்வொரு போட்டியாளரும் பிக் பாஸ் வீட்டில் ஏதாவது கண்டெண்ட் கொடுத்தே ஆக வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியால் தங்களுக்கும் பிரபலம் கிடைக்கும் என ஆரம்பத்தில் இதற்கு ஓகே சொல்லி விடுகிறார்கள் போட்டியாளர்கள். ஆனால், நிகழ்ச்சிக்குள் சென்றதும் சில பேர் சாமர்த்தியமாக விளையாட ஆரம்பித்து விடுகின்றனர்.

வனிதாவின் வெளியேற்றம்:

வனிதாவின் வெளியேற்றம்:

எனவே, கண்டெண்ட் கொடுப்பவர்களை மட்டுமே உள்ளே வைத்துக் கொண்டு மற்றவர்களை ஒவ்வொருவராக வெளியே அனுப்பி விடுவது பிக் பாஸின் வழக்கம். இம்முறை பிக் பாஸ் வீட்டில் வனிதா தான் ஆரம்பத்தில் கண்டெண்ட் குயினாக இருந்தார். ஆனால் அவரது சொந்தப் பிரச்சினை காரணமாக மூன்றாவது வாரமே வெளியில் அனுப்பப்பட்டு விட்டார்.

சாக்‌ஷி:

சாக்‌ஷி:

பின்னர் அவரது இடத்தை மீரா நிரப்பி வந்தார். வனிதா அளவுக்கு இல்லையென்றாலும், மீராவும் வேறு மாதிரி கண்டெண்டுகளைக் கொடுத்தார். ஆனால் அவரும் வழக்கு காரணமாக வெளியில் வந்து விட்டார். இதனால் பிக் பாஸுக்கு தற்போது இருக்கும் ஒரே நம்பிக்கை சாக்‌ஷி தான். அவர் தான் கவின், லாஸ்லியாவை வைத்து கடந்த சில வாரங்களாக கண்டெண்ட் கொடுத்து வருகிறார்.

பிக் பாஸ் செல்லம்:

பிக் பாஸ் செல்லம்:

கடந்த சீசனில் மக்களிடம் வெறுப்பை அதிகமாகச் சந்தித்த ஐஸ்வர்யா தத்தாவை ஏதேதோ காரணங்களைச் சொல்லி, கடைசி வரை நிகழ்ச்சியில் இருக்க வைத்தார் பிக் பாஸ். எங்கே டைட்டிலையும் அவருக்கே கொடுத்து விடுவாரோ என மக்கள் பயப்படவே தொடங்கி விட்டனர். கடைசியில் அவரை ரன்னர் அப் ஆக்கி ரித்விகாவுக்கு டைட்டிலைக் கொடுத்து மக்களிடம் இருந்து தப்பினார்.

பலிகடா:

பலிகடா:

தற்போதும் அதே மாதிரி, ஆரம்பம் முதலே சாக்‌ஷியைக் காப்பாற்றி வருகிறார் பிக் பாஸ். இந்த வாரம் எப்படியும் சாக்‌ஷி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவர் ரேஷ்மாவை விட முந்தி விட்டதாகக் கூறி, ரேஷ்மாவை பலிகடா ஆக்கி விட்டனர்.

முக்கோணக் காதல் கதை:

முக்கோணக் காதல் கதை:

இந்த வாரமும் சாக்‌ஷியை வைத்துத் தான் கண்டெண்ட் எடுக்க பிக் பாஸ் திட்டமிட்டிருக்கிறார் போல. இன்றைய முதல் இரண்டு புரொமோக்களிலுமே சாக்‌ஷியால், முகென் மற்றும் அபிராமிக்கு இடையே பிரச்சினை வருவது போல் பிக் பாஸ் காட்டியிருக்கிறார். எனவே, சாக்‌ஷியின் முக்கோணக் காதல் கதை இனி வேறு திசைக்கு மாறும் எனத் தெரிகிறது.

ரசிகர்கள் கருத்து:

ஆனால், முதல் சீசனைப் போல் இல்லை. தற்போது ரசிகர்களுக்கும் பிக் பாஸின் ஸ்ட்ராடஜி என்ன என்பது புரிந்து விட்டது. பேருக்குத் தான் இது ரியாலிட்டி ஷோ. மற்றபடி இது முழுவதும் ஸ்கிரிப்ட் பண்ணியது என ரசிகர்களே சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The fans started commenting that the Bigg boss show is fully scripted and also says that Reshma eviction proves it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more