வனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல... ‘இது’தான் முக்கியக் காரணம்.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற அவர் மீதுள்ள வழக்குகளும் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 21 Highlights : வனிதா வெளியேற இதுதான் காரணமா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டதற்கு மக்கள் அளித்த வாக்குகள் மட்டுமே காரணம் இல்லை, மற்றொரு பெரிய காரணம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டது பற்றி தான் ஊரே பேச்சாக இருக்கிறது. இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என ஆளாளுக்கு பேசி வருகிறார்கள். ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஹவுஸ்மேட்ஸ்க்கு கூட அதே சந்தேகம் தான். ஒருவேளை சீக்ரெட் ரூம் மூலம் மீண்டும் வனிதா வந்தாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் உள்ளது.

வனிதா வெளியேற்றப்பட முக்கிய காரணமாக கூறப்பட்டது, கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் அவருக்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்தன என்பதே. அது உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில் சண்டைக்கோழியாக வனிதா வலம் வந்தது யாருக்கும் பிடிக்கவில்லை என்பது நிதர்சனம்.

வழக்குகள் தான் காரணம்:

வழக்குகள் தான் காரணம்:

ஆனால் அது மட்டுமே காரணமா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். காரணம் வனிதா மீது பதியப்பட்டுள்ள வழக்குகள். இதுபற்றி சட்ட நிபுணர்களிடம் விசாரித்தோம். அவர்களும் அதையே தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒரு நபரை அதிக நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க முடியாது என வழக்கறிஞர் ஒருவர் உறுதியாக கூறினார்.

மகள் கடத்தல் விவகாரம்:

மகள் கடத்தல் விவகாரம்:

இதனை உறுதி செய்வது போல், பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்த மூன்று வார காலத்திற்குள்ளாகவே ஒருமுறை மகளை கடத்திய விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்றது நாமறிந்த செய்தி தான். அப்போதே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று தான் போலீசார் விசாரணை நடத்தினர். இது அந்த நிகழ்ச்சிக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது.

போலீஸ் விசாரணை:

போலீஸ் விசாரணை:

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய சாராம்சமே போட்டியாளர்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான். இதனால் அடிக்கடி போலீசார் விசாரணை என வந்தால், நிகழ்ச்சியின் தன்மையே கெட்டுவிடும். எனவே, அதிக வழக்குகள் உள்ள நபரை போட்டியாளராக நீண்ட நாட்கள் வீட்டிற்குள் வைத்திருக்க பிக் பாஸ் விரும்பவில்லை.

ரகசியங்கள் வெளி வரும்:

ரகசியங்கள் வெளி வரும்:

வனிதாவால் டிஆர்பி எகிறி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் வெளியேற்றப்பட்டது பல கேள்விகளை எழுப்ப தான் செய்கிறது. ஆனால் அதற்கான சரியான விடை வனிதாவுக்கும், பிக் பாஸ்க்கும் தான் தெரியும். எப்படியும் ஓரிரு நாளில் மீடியாக்களிடம் வனிதா வாய் திறப்பார். அப்போது இந்த ரகசியங்கள் எல்லாம் வெளிவந்தே தீரும்.

யார் அந்த நண்பர்?

யார் அந்த நண்பர்?

எனவே அனைவரது எதிர்பார்ப்பும் வனிதா என்ன சொல்லப்போகிறார் என்பதில் தான் இருக்கிறது. கடைசி நாளில் மேடையில் கமலிடம் பேசிய போது, ஒரு நபரை பற்றி வனிதா குறிப்பிட்டார். வெளியில் தனக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர், வீட்டிற்குள் அந்நியமாக நடித்தார் என அவர் கூறியிருந்தார். அவர் யாரை அப்படிக் குறிப்பிட்டார் என்பதும் அப்போது தான் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X