செருப்படி.. செம நோஸ்கட்.. இதைத்தான் எதிர்பார்த்தோம் கமல் சார்.. வனிதாவை சும்மா விட்ராதீங்க!
தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் புரோமோவில் வனிதாவுக்கு, நடிகர் கமல் கவுண்டர் கொடுத்துள்ளார்.
சென்னை: தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் புரோமோவில் வனிதாவுக்கு, நடிகர் கமல் கவுண்டர் கொடுக்கிறார். இதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்ததில் இருந்து, காலையில் முதல் புரொமோவும், பிறகு மாலைக்குள் அடுத்த இரண்டு புரொமோக்கள் வெளியாவது வழக்கம். ஆனால், இன்று மதியத்தில் தான் முதல் புரொமோவே வெளியிட்டனர்.
அந்த புரொமோவில் போட்டியாளர்களைக் காட்டாமல் கமல் பேசுவதாகவே இருந்தது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர். இந்த மொக்கை புரொமோவை போடுவதற்கா இவ்வளவு நேரம் என கமெண்ட் செய்தார்கள்.

புதிய புரொமோ:
இந்நிலையில் அடுத்த புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. காரணம் வனிதாவினை தாக்கி அவர் பேசியிருப்பது தான். பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதாவின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவரது நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் இருக்கிறது கமலின் பேச்சு.

வனிதாவுக்கு பதிலடி:
புரொமோவின் தொடக்கத்தில் அபிராமியை பற்றி குறை கூறுகிறார் வனிதா. அதற்கு பதில் அளிக்கும் கமல், "உங்களுடைய பேச்சின் மூலம் வேறு ஒருவருக்கு கவனம் சென்றுவிடும் எனும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது. ஒரு குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாம் பேசும் அளவுக்கு கேட்கவும் வேண்டும்", எனக் கூறி வனிதாவின் மூக்கை உடைத்திருக்கிறார்.
ரசிகர்கள் உற்சாகம்:
இந்த புரொமோ பிக் பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. "செம செம செம. நாம் பேசுற அளவுக்கும் நாம் கேட்கவும் வேண்டும். வனிதா புரியுதா? ஆண்டவர் (கமல்) உங்களுக்கு சொல்லாரு. மண்டையில ஏறுதா? இவங்கள விடாதீங்க. நல்ல கொடுங்க சார். என்ள ஆட்டம் இந்த வாரம். செம ஜாலி. மைக் பணிஷ்மெண்ட் மறந்துடாதீங்க", என பொங்கியிருக்கிறார் ஒரு ரசிகர்.
வனிதா வீடு இல்ல:
" என்னுடைய அம்மாவா இருந்தா அவங்க சொல்றதுக்கு காது கொடுக்கலாம். அவங்க யார் எனக்கு. எத்தனை நாளா அவங்கள எனக்கு தெரியும்? ஒரு 18, 19 நாளா தான தெரியும். எனவே அவங்க வாய மூடனும். இல்லைனா அவங்க முகத்த பார்த்து சிரிச்சிட்டு போய்டுங்க. இது பிக் பாஸ் வீடு. வனிதாவின் வீடு இல்ல", என இந்த ரசிகர் கொந்தளித்திருக்கிறார்.
செம நோஸ்கட்:
"என்ன வனிதாவுக்கு மூக்க காணோம். நோஸ்கட் மேல நோஸ்கட்டா வாங்கிட்டு இருக்கா போல" என ஒருவர் கேலி செய்துள்ளார். தர்ஷன் ஆர்மியை உறுப்பினர்கள், "நெருப்புடா நெறுங்குடா பார்ப்போம்"னு கமெண்ட் போட்டிருக்காங்க.
அமைதியா ஊசி:
"கமல் சார் இதை தான் எதிர்பார்க்கிறோம். அமைதியா ஊசி குத்திவிடுங்க. யாரையும், திட்டவோ, அவமானப்படுத்தவோ இல்லாம, திருந்தும் அளவுக்கு அறிவுரை சொல்லுங்க போதும்னு", சிலர் கேட்டுள்ளனர்.

மோகன் வைத்யா:
புரொமோவுக்கே இந்த எபெக்ட் என்றால், மெயின் நிகழ்ச்சிக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருக்கும் என இப்போதே யூகிக்க முடிகிறது. ஆக இன்னைக்கு பிக் பாஸ் டிஆர்பி எகிறும். இருந்தும் என்ன பயன், வனிதா தான் இந்த வாரம் எலிமினேட் ஆகலையே. பாவம் நம்ம ஏமாளி மோகன் வைத்தியாவ தான் பிக் பாஸ் வெளியேத்தப் போறதா பேசிக்கிறாங்க. பார்ப்போம் என்ன நடக்குதுனு.


Click it and Unblock the Notifications











