'கைல காசு.. வாயில தோசை'.. ஓ, இதுதான் கஸ்தூரியோட காண்ட்ராக்டா.. கமல் இப்டி பப்ளிக்கா உளறிட்டாரே!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி என்ன ஒப்பந்தத்தின் அடிப்படையில் வந்திருக்கிறார் என்பதை கமல் சூசகமாக தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகை கஸ்தூரி என்ன காண்ட்ராக்ட்டில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார் என்பது கமலின் பேச்சை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது.

பிக் பாஸ் வீட்டில் 17வது போட்டியாளராக வந்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. கடந்த வாரம் வார நாட்களில் வந்ததால், நேற்று தான் கமலை அவர் சந்தித்தார். அவரிடம் கமல் மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசினார்.

அப்போது முன்னெச்சரிக்கையாக கமல் கூறிய விசயம் மூலம், பிக் பாஸ் வீட்டிற்கு கஸ்தூரி எப்படி, ஏன் வந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் காண்ட்ராக்ட்:

பிக் பாஸ் காண்ட்ராக்ட்:

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருமே காண்ட்ராக்ட்டில் கையெழுத்து போட்டுதான் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கின்றனர். ஒவ்வொருவரின் பிரபலத்தன்மைக்கு தகுந்தமாதிரி சம்பளமும் பேசப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நாம் அறிந்த விசயம் தான். ஆனால், இது இல்லாமல் மறைமுகமாக சில ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா தத்தா:

ஐஸ்வர்யா தத்தா:

கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் பல்வேறு களேபரங்களைச் செய்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. காமெடி நடிகர் பாலாஜி மீது அவர் குப்பையைக் கொட்டிய போது, மக்கள் அவர் மீது உச்சகட்ட கோபமடைந்தனர். ஒவ்வொரு வாரமும் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என விரும்பினர். ஆனால், ஏதேதோ காரணங்கள் கூறி கடைசி வரை அவரை நிகழ்ச்சியிலேயே இருக்க வைத்தார் பிக் பாஸ்.

உளறிக் கொட்டிய வனிதா:

உளறிக் கொட்டிய வனிதா:

அப்போதே மக்கள் சந்தேகப்பட்டனர். ஏதோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்ற சந்தேகம் வலுவானது. இதனை உறுதி செய்யும் வகையில், இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா, தர்ஷனுடனான சண்டையில் 'உன் காண்ட்ராக்ட் வேற என் காண்ட்ராக்ட் வேற' என ரகசியத்தை போட்டுடைத்தார். அது உண்மை என்பது போல் தான் இந்த சீசனில் போட்டியாளர்களின் வெளியேற்றமும் உள்ளது.

கஸ்தூரியின் வருகை:

கஸ்தூரியின் வருகை:

இந்தச் சூழ்நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் புதிய போட்டியாளராக களமிறங்கியுள்ளார் கஸ்தூரி. முதல் சீசனில் இருந்தே அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசி வரை அதனை மறுத்தே வந்தவர், அதிரடியாக கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். சேரனைப் போலவே பலமான போட்டியாளர் கஸ்தூரி என்பது சக போட்டியாளர்களுக்குத் தெரியும்.

கமல் பேச்சு:

கமல் பேச்சு:

ஆனால், சேரன் ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார் என்ற கேள்வியைப் போலவே, இப்போது எப்படி கஸ்தூரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்தார் என்ற சந்தேகமும் மக்களிடையே உள்ளது. இந்த கேள்விக்கான விடையை நேற்று கமல் தனது பேச்சினூடே தெளிவாக கூறிவிட்டார். அதாவது, வைல்ட் கார்டு மூலம் வந்தவர்களும் பட்டம் வெல்ல வாய்ப்புண்டு என்பது தான் அது.

உஷாரய்யா உஷாரு:

உஷாரய்யா உஷாரு:

ஏற்கனவே கடந்த சீசனில் கடைசியாக வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தார் நடிகை விஜயலட்சுமி. திறமையாக விளையாடிய அவரை சக போட்டியாளர்கள், கடைசியில் வந்துட்டு டைட்டிலுக்கு ஆசைப்படுறீங்களே என குத்திக் காட்டியபடியே இருந்தனர். இம்முறையும் அதேபோன்ற நிலைமை கஸ்தூரிக்கு வந்துவிடக் கூடாது என்பதாலேயே கமல் முன்கூட்டியே இப்படி கூறியிருக்கிறார் போலும்.

எதிர்பார்க்கலாம்:

எதிர்பார்க்கலாம்:

கமலின் இந்த பூடகமான பேச்சை வைத்துப் பார்க்கையில், கஸ்தூரிக்கு டைட்டில் கிடைத்தாலும் சந்தேகமில்லை. ஒருவேளை டைட்டிலைத் தராவிட்டாலும், ரன்னர் அப்பாவது தருவார் பிக் பாஸ் என எதிர்பார்க்கலாம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பார் எனத் தெரிகிறது. அதனால் தானோ என்னவோ வந்தவுடனேயே அவருக்கு பல்வேறு பவர்களைக் கொடுத்து சகபோட்டியாளர்களை பதற வைத்து விட்டார் பிக் பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X