இந்த அசிங்கம் உங்களுக்குத் தேவையா கஸ்தூரி..? இனி ஹவுஸ்மேட்ஸ் ரூம் போட்டு கலாய்ப்பாங்களே!

பொங்கல் செய்யத் தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் அசிங்கப்பட்டுள்ளார் கஸ்தூரி.

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளார் கஸ்தூரி.

பிக் பாஸ் வீட்டில் 17வது போட்டியாளராக வைல்ட் கார்டு மூலம் கஸ்தூரி உள்ளே வந்துள்ளார். முதலில் அவர் சிறப்பு விருந்தினராக வந்துள்ளாரா இல்லை புதிய போட்டியாளரா என்ற குழப்பம் அனைவருக்கும் இருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் கஸ்தூரியும் சக போட்டியாளர்களிடம் மிடுக்காக கேள்வியெல்லாம் கேட்டார். தண்டனையெல்லாம் கொடுத்தார்.

இதனால் போட்டியாளர்கள் மிரட்சியுடன் இருந்தனர். ஆனால் தற்போது அவர் புதிய போட்டியாளர் தான் என்பது தெரிந்து விட்டது.

அலட்சியம்:

அலட்சியம்:

எனவே, கஸ்தூரியும் நம்மைப் போல் ஒரு போட்டியாளர் தானே என்ற அலட்சியம் போட்டியாளர்களுக்கு வந்துவிட்டது. எனவே, சகபோட்டியாளர்கள் அவரையும் கலாய்க்க, புறணி பேச ஆரம்பித்து விட்டனர். இப்போதே சண்டைகூட வர ஆரம்பித்து விட்டது.

சமையல் டாஸ்க்:

சமையல் டாஸ்க்:

இந்நிலையில் நேற்று சமையல் செய்யும் டாஸ்க் ஒன்று தரப்பட்டது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். ஷெரீனைத் தவிர பெண்கள் அனைவரும் ஒரு குழுவாகவும், சேரனைத் தவிர ஆண்கள் அனைவரும் ஒரு குழுவாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

சர்க்கரைப் பொங்கல்:

சர்க்கரைப் பொங்கல்:

ஷெரீன் ஆண்கள் அணியிலும், சேரன் பெண்கள் அணியிலும் இருந்தார். இந்தப் போட்டிக்கு மதுமிதா நடுவராக இருந்து, வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தார். போட்டியாளர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் செய்யும் டாஸ்க் தரப்பட்டது. இரு அணியும் தங்களால் முடிந்த அளவிற்கு சர்க்கரைப் பொங்கலைச் செய்தனர்.

போட்டியின் முடிவு:

போட்டியின் முடிவு:

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல்நாளே தனக்கு சமையல் செய்யத் தெரியும் என்றார் கஸ்தூரி. அதிலும் குறிப்பாக சைவ சமையல் செய்வேன் என அவர் கூறியிருந்தார். இதனால் அவர் இருக்கும் அணி தான் இந்தப் போட்டியில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியின் முடிவு வேறு மாதிரி ஆகிவிட்டது.

பிரைடு ரைஸ்:

பிரைடு ரைஸ்:

சமையலில் கத்துக் குட்டிகளான தர்ஷன் அணி பொங்கலை சூப்பராக செய்தது. ஆனால் கஸ்தூரி அணியோ பொங்கலில் கடலைப்பருப்பைக் கொட்டி, அரிசியைக் கழுவாமல் போட்டு, வேகாத பிரைடு ரைஸ் மாதிரி ஒன்றைச் செய்திருந்தனர். இதனால், கஸ்தூரியைத் தான் எதிர் அணியினர் செமயாகக் கலாய்த்தனர்.

நடுவர் மது:

நடுவர் மது:

ஏனென்றால் தற்போது பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரிக்கும், மதுமிதாவுக்கும் தான் சமையல் ஓரளவுக்குத் தெரியும். மதுமிதா நடுவராகி விட்டார். கஸ்தூரி அணியில் சாக்‌ஷி உட்பட வேறு யாருக்கும் சமையல் தெரியாது. இதனால் எல்லாவற்றிற்கும் காரணமான கஸ்தூரியை அவர்கள் கழுவி கழுவி ஊற்றினர்.

பொய்:

பொய்:

அரிசியைக் கழுவித் தான் சமைக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையே என கஸ்தூரியை நெட்டிசன்களும் கிண்டல் செய்து வருகின்றனர். பொங்கல் கூட செய்யத் தெரியாத நீங்கள் எப்படி சமையல் செய்வேன் எனப் பொய் கூறினீர்கள் என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சமையல் டாஸ்க் மூலம் தன் மீதிருந்த இமேஜை தானே டேமேஜ் செய்து கொண்டுள்ளார் கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X