வந்த உடனேயே தன் வேலையை காட்டிய கஸ்தூரி.. நச்சென மூக்கை உடைத்த ஷெரீன்.. இன்னும் என்னலாம் நடக்க போகுதோ

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நடிகை கஸ்தூரி, அங்கு ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து வருகிறார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day:46 : சேரனை கலாய்க்கும் கஸ்தூரி- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கையோடு தன் வேலையை காட்டத் தொடங்கிவிட்டார் நடிகை கஸ்தூரி.

பிக் பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி சர்ப்ரைஸாக சென்றுள்ளார். நிச்சயம் அவர் சிறப்பு விருந்தினராகத் தான் அங்கு சென்றிருக்க வேண்டும். காரணம், அங்கு போட்டியாளர்களிடம் தன் மனதில் உள்ள கேள்விகளை அவர் கேட்கத் தொடங்கி இருக்கிறார்.

எப்போதுமே தன் மனதில் பட்டதை முகதாட்சண்யம் பார்க்காமல் கேட்டுவிடுவது கஸ்தூரியின் குணம். இதற்காக அவர் பல சர்ச்சைகளில் கூட சிக்கியிருக்கிறார்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக் பாஸ் நிகழ்ச்சியில், சர்ச்சை ராணி கஸ்தூரி நுழைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்கள், அவர்களின் குணங்கள், ஸ்ட்ராடஜி பற்றி எல்லாம் தெளிவாக புரிந்து வைத்திருப்பவர் கஸ்தூரி. தனது டிவிட்டர் பக்கத்திலும் தினமும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமயங்களில் போட்டியாளர்களின் செய்கைகள் குறித்து காட்டமாக விமர்சிக்கவும் செய்கிறார்.

சாக்ஷி தான் முதல் டார்கெட்

சாக்ஷி தான் முதல் டார்கெட்

இந்த சூழ்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களை நேரடியாகவே சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அல்வா போல் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுவிடுவாரா கஸ்தூரி. கிப்ட் பாக்சில் இருந்து வெளியில் வந்த உடனேயே சாக்ஷியை டார்கெட் செய்தார் கஸ்தூரி. இப்போது இரண்டாவது புரொமோவில் சேரன், தர்ஷன் மற்றும் ஷெரீனுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

சேரனிடம் கலாய்

சேரனிடம் கலாய்

அப்போது பிக் பாஸ் வீட்டின் கண்டென்ட் குயின்களான வனிதா, மீரா பற்றி கஸ்தூரியிடம் சொல்கிறார் சேரன். அதற்கு கஸ்தூரி, ‘எனக்குத் தான் தெரியுமே.. அந்த சம்பவத்திற்கு பிறகு நீங்க ரோபோ மாதிரி கையை வெச்சுட்டு இருக்கீங்க', என சொல்லி கலாய்க்கிறார். அடுத்ததாக, "தர்ஷனிடன் நீங்க ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தீங்க?", என கேட்கிறார்.

தர்ஷனும் ஷெரீனும்

தர்ஷனும் ஷெரீனும்

அதற்கு, "மக்கள் என்னை பார்க்கனும். அதற்கு தான் வந்தேன்" என பதிலளிக்கிறார் தர்ஷன். இதே கேள்வியை ஷெரீனிடமும் கேட்கிறார். அதற்கு அவர், "தர்ஷனை பார்க்க தான் வந்தேன்" என பதிலடி கொடுக்கிறார். ஷெரீன் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சரியான நோஸ்கட் பதில் என ஷெரீன் ஆர்மியினர் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

கொட்டு வைத்த ஷெரீன்

கொட்டு வைத்த ஷெரீன்

பெரும் பில்டப்போடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள கஸ்தூரிக்கு, ஷெரீன் பதில் கொட்டு வைத்து போல் ஆகிவிட்டது. புரொமோ இப்படி என்றால் இன்றைய எபிசோடில் கன்டெண்டுக்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது. பிக் பாஸ் எல்லாவற்றையும் நன்றாக ஸ்கிரிப்ட் செய்து தான் தருகிறார்.

உண்மை இது தானா

உண்மை இது தானா

அதோடு சமீபகாலமாக தர்ஷனோடு நெருங்கிப் பழக ஆரம்பித்து இருக்கிறார் ஷெரீன். நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட காட்சியில் தர்ஷன் மீது தனக்கு பீலிங்ஸ் வந்ததாகவும், ஆனால் தர்ஷன் தனக்கு வெளியில் காதலி இருக்கிறார் எனக் கூறியதால் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் ஷெரீன் கூறியுள்ளார்.

கேலி:

கேலி:

அதன் காரணமாகக் கூட ஷெரீன் கஸ்தூரியிடம் அப்படி பதில் சொல்லி இருக்கலாம். ஆனால், இருவரும் தற்போது நண்பர்களாகவே பழகி வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் இருவரையும் பிக் பாஸ் வீட்டிலும், வெளியிலும் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X