கவினுக்கு வெளியில் காதலி இருக்கிறார்.. பிக் பாஸ்-ல் ஏமாற்றி வருகிறார்: பிரபல தயாரிப்பாளர் பேட்டி
நடிகர் கவின் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதாக நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவிந்தர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸில் காதல் மன்னனாக வலம் வரும் கவினுக்கு, வெளியில் வேறு காதலி இருப்பதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் ரவிந்தர்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் கவின். நீண்ட இழுபறிக்குப் பிறகு அவர் நாயகனாக நடித்த நட்புனா என்னன்னு தெரியுமா படம் சமீபத்தில் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அப்படம் தரவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கவின். ஆனால், அங்கு அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றன.

காதல் மன்னன் கவின்
பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாகத் தான் கவின் வலம் வருகிறார். ஆரம்பம் முதலே பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் ஐந்து பேரை காதலிப்பதாக அவர் கூறி வந்தார். முதலில் இதனை போட்டியாளர்களும் சரி, மக்களும் சரி விளையாட்டாகவே எடுத்துக் கொண்டனர். ஆனால், கவினின் நடவடிக்கைகளால் இது பிரச்சினையாக மாறியது.

கமல் அறிவுரை
மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள் என கமலே அறிவுரை கூறும் அளவிற்கு கவினின் நடவடிக்கை சென்று விட்டது. பிக் பாஸ் வீட்டில் தான் யாரையும் நிஜமாக காதலிக்கவில்லை என அவ்வப்போது கவின் கூறி வந்தாலும், அவரது நடவடிக்கைகள் நம்பும் படி இல்லை. சாக்ஷியை அவர் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதாகவே சமீபத்திய எபிசோட்களில் காட்டப்பட்டு வருகிறது.

லாஸ்லியாவுடன் நெருக்கம்
இந்நிலையில் தற்போது லாஸ்லியாவுடன் நெருங்கிப் பழகி வருகிறார் கவின். லாஸ்லியாவும் கவினைக் காதலிப்பது போலவே காட்டப்படுகிறது. இங்கு வைத்து காதலிக்காதீர்கள், வெளியில் போய் காதலித்துக் கொள்ளுங்கள் என கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் சக போட்டியாளர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். ஆனால், அது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.

வேறொரு காதலி
காரணம் கவினுக்கு வெளியில் வேறொரு காதலி இருக்கிறாராம். முகென், தர்ஷன் போன்றோர் தங்களது காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட சூழலில், கவின் மட்டும் தொடர்ந்து நல்லவர் போல் நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. கவின் ஹீரோவாக நடித்த நட்புனா என்னனு தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் லிப்ரா புரடக்ஷன்ஸ் ரவிந்தரும் இதனை தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.

தயாரிப்பாளர் ரவிந்தர் பேட்டி
அப்பேட்டியில் அவர், "கவின் தன் காதலியுடன் பேசுவதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் நடிப்பு திறமையை பார்த்து அவரை வைத்து படம் இயக்கவேண்டும் என முடிவெடுத்து நான் ஏமாந்தது போல, தற்போது தமிழ்நாடு மக்களும் கவினை பிக்பாஸில் பார்த்து ஏமாந்து கொண்டிருகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். ஆனால் கவினின் காதலி யார், அவரது பெயர் என்ன என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











