Bigg boss 3 tamil: லாஸ்லியா இப்படி கதைக்கலாமா பிக் பாஸ்?

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சி பிக் பாஸ், இந்த நிகழ்ச்சியின் தாக்கத்திலிருந்து பல முன்னணி சேனல்கள் இன்னமும் மீண்டு வர முடியவில்லை. அப்படி ஒரு இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளது பிக் பாஸ்.

முதலில் வீட்டு மளிகை சாமான்களுக்கு என்று ஒரு டாஸ்க் நடக்கும். அடுத்து, அந்த வாரத்துக்கான டாஸ்க் என்று நடக்கும்.இதில் சண்டை, மன வருத்தம், மனக் குழப்பம் என்று ஹவுஸ் மேட்ஸுக்குள் ஏற்படுவது இயற்கைதான்.

இப்படி சண்டை, வம்பு, காதல்,மோதல்,பிரிவு என்று மனித குலத்தில் இயற்கையாக நடக்கும் அத்தனையும் பிக் பாஸ் வீட்டில் நடக்கிறது. வார கடைசியின் இரண்டு நாட்களில் உலக நாயகன் கமல்ஹாசன் வரும் நாளுக்காக வாரம் முழுவதும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.

நினைவுகள் என்ன

நினைவுகள் என்ன

உங்களுடன் இருக்கும் ஹவுஸ் மேட்சில் யாரிடம் என்ன கேட்க விரும்புகிறீர்களோ, அதை பிக் பாஸ் பேசும் அறையில் ரகசியமாக உங்களின் பெயர் தெரிவிக்காமல் எழுதி கேட்கலாம் என்று ஹவுஸ் மேட்ஸ் மனதைத் தெரிந்துகொள்ள ஒரு டாஸ்க் வைத்திருந்தார்கள்.அதில் தாங்கள் யாரிடம் என்னகேள்வி கேட்க விரும்புகிறார்களோ அதை எழுதி இருந்தார்கள்.

மீண்டும் சாக்ஷி

மீண்டும் சாக்ஷி

இதில் மீண்டும் கவின் சாக்ஷி பிரச்சனை எழுந்தது.அப்போது கவின் ஒரு விளக்கம் கொடுத்தார்.அதற்கு பதில் கொடுக்க வந்த சாக்ஷி ஆரம்பத்தில் நடந்ததில் இருந்து சொல்ல ஆரம்பித்தார். அப்போது அவருக்குள் காதல் வலி. கமல் சார் வந்து பிரச்சனை தீர்த்து வைத்த பிறகு,கொஞ்சம் டைம் குடு நான் வெளியில வரணும்னு சொல்லி இருந்தேன். ஆனா, நீ இன்னொரு பெண் கூட கை கோர்த்துக்கிட்டு சுத்திகிட்டு இருக்கே. இரவு 3 மணி 4 மணி வரைக்கும்பேசிகிட்டு இருக்கே..அப்புறம் என் உணர்வுகளுக்கு என்ன மதிப்பு குடுக்கறே? உன்னால இது எப்படி உடனடியா முடிஞ்சுதுன்னு கேட்டார்.

லாஸ்லியா தானாக

லாஸ்லியா தானாக

இதற்கு நான் பதில் சொல்லறேன்னு வந்த லாஸ்லியா, ஆமாம் நான் கவின் கையைப் பிடிச்சுக்கிட்டுத்தான் சுத்தினேன். எனக்கு என்னோட லிமிட் தெரியும் .,நான் முகேன் கூட எப்படி பழக்கறேன், தர்ஷன் கூட எப்படி பழக்கறேன்னு புரிஞ்சுதான் பழகறேன். எங்க இருவருக்குள் இருப்பது நட்புதான்.கவினை எனக்கு அப்பவும் பிடிக்கும் இப்பவும் பிடிக்கும், எப்பவும் பிடிக்கும்..

தேவையும் இல்லை

தேவையும் இல்லை

எனக்கு இதுக்கு தனியா வந்து யார்கிட்டயும் விளக்கம் குடுக்கணும்னு அவசியம் இல்லை. அதுக்கான தேவையும் இல்லை.இதனால் என்னை பத்தி யார் என்ன நினைச்சாலும் கவலையும் இல்லைன்னு சொல்லிட்டு போனார். இதற்கு முன்பாக லாஸ்லியாவுக்கு ஒரு கேள்வி பவந்த போதும், இப்படித்தான் எனக்கு பின்னே கதைக்கறவங்க பத்தி எனக்கு கவலை இல்லை. யாரைப் பத்தியாவது பின்னே போயி கதைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.அதற்கான தேவையும் இல்லைன்னு எடுத்தெறிஞ்சு பேசுவது போல பேசினார்.

அவசியமும் இல்லைன்னா

அவசியமும் இல்லைன்னா

எந்த தேவையும்,அவசியமும் இல்லை என்றால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த தேவையும் அவசியமும் என்ன? பிக் பாஸ் என்பது ஒரு ஹவுஸ்.. இதில் ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து வாழும் வாழ்க்கையைத்தான் வலியுறுத்தி வருகிறார்கள். இதில் எனக்கு எதற்கும் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்றால் நீங்க பிக் பாஸுக்கு தேவை என்கிற அவசியம் ரசிகர்களுக்கு இல்லை. நீங்கள் இருந்தால்தான் பிக் பாஸ் ஹவுஸ் நன்றாக இருக்கும் என்றால அப்படிப்பட்ட தேவை எங்களுக்கு இல்லை என்று நாங்கள் கதைக்கலாமா லாஸ்லியா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X