முதன்முறையாக நாமினேசனுக்கு வரும் தலைவி.. பக்கா பிளானில் லாஸ்லியா ஆர்மி.. தீயா வேலை செய்யணும் குமாரு!

முக்கோண காதல் பிரச்சினையால் லாஸ்லியாவின் பெயர் இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day:43: மீண்டும் Sakshi-யால் தொடர்ந்த பிரச்சனை-வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் முதல் முறையாக லாஸ்லியா நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் க்யூட் போட்டியாளர். நிகழ்ச்சி ஆரம்பித்த ஓரிரு நாட்களிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களும் லாஸ்லியா ஆர்மியில் சேர்ந்தனர். சமூக வலைதளப்பக்கங்களில் லாஸ்லியாவை புகழாத ஆட்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அவரது ரசிகர் வட்டம் பெருகியது.

எல்லோருக்கும் பிடித்த லாஸ்லியா:

எல்லோருக்கும் பிடித்த லாஸ்லியா:

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு கூட லாஸ்லியாவை மிகவும் பிடித்தது. அதனால் கடந்த ஆறு வாரங்களாக அவரை யாரும் நாமினேட் செய்யவில்லை. சேரனை அப்பா என்றழைப்பது, காலையில் தவறாமல் டான்ஸ் ஆடி கலக்குவது, சக போட்டியாளர்களுடன் கதைப்பது என நல்லா போய்க்கொண்டிருந்த லாஸ்லியாவின் பிக் பாஸ் வாழ்க்கையில் தற்போது இடி விழுந்திருக்கிறது.

நாமினேட்டான லாஸ்லியா

நாமினேட்டான லாஸ்லியா

வழக்கமாக திங்கட்கிழமைகளில் எவிக்ஷன் நடைமுறைகள் தொடங்கும். அப்படி இந்த வார எவிக்ஷவின் லாஸ்லியாவின் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. சரவணன், சாக்ஷி, ஷெரின் உள்ளிட்டவர்கள் லாஸ்லியாவின் பெயரை நாமினேட் செய்துள்ளனர். இன்று வெளியான மூன்றாவது புரொமோவில் இது காட்டப்பட்டுள்ளது.

காதல் பிரச்சினை :

காதல் பிரச்சினை :

கவின் - சாக்ஷி - லாஸ்லியா இடையேயான முக்கோண காதல் தொடர்பான பிரச்சினை கடந்த வாரம் உச்சத்தை தொட்டது. சாஷ்கிக்கும், லாஸ்லியாவுக்கும் இடையே பெரிய சக்களத்தி சண்டையே நடந்தது. அப்போது தன்னுடன் யாரும் கதைக்க வேண்டாம் எனக்கூறி, விர்ரென நடந்து சென்றார் லாஸ். இது தான் அவர் நாமினேட் செய்யப்பட்டதற்கு காரணம்.

வெறுப்பு:

வெறுப்பு:

அப்போதே அனைவரும் லாஸ்லியாவை சரியான ஆட்டிடியூட் என திட்டினர். அதுவும் அனைத்து போட்டியாளர்களையும் ஒன்றாக அழைத்து, ‘இனி உங்கள் யாருடனும் பேச மாட்டேன்' என முகத்தில் அடித்தார் போல் கூறினார் லாஸ்லியா. இதனால் அவர் மீது சக போட்டியாளர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே இதுவரை நாமினேசனுக்கே செல்லாத லாஸ்லியா முதன்முறையாக நாமினேசனுக்கு சென்றுள்ளார்.

செல்வாக்கு:

செல்வாக்கு:

இதுவரை மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்ற போட்டியாளராக லாஸ்லியா கருதப்பட்டு வருகிறார். டைட்டிலைக் கூட வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்பட்டது. இந்த வாரம் அவருக்கு கிடைக்கும் வாக்குகளை வைத்து ஆதரவுகளை வைத்துத் தான், மக்களிடம் அவருக்கு எப்படி ஆதரவு, செல்வாக்கு இருக்கிறது என்பது தெரிய வரும். எனவே, லாஸ்லியாவிற்கு அதிக வாக்குகள் கிடைக்க தீயா வேலை செய்யணும் குமாரு என அவரது ஆர்மியினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

சாக்ஷியும் தான் :

அவருடன் சேர்ந்து வேறு யார் எல்லாம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். சாக்ஷியை லாஸ்லியா நாமினேட் செய்துள்ளார். வேறு யாரேனும் சாக்ஷியை நாமினேட் செய்தால், அவரும் பட்டியலில் இணைந்துவிடுவார். அப்படி ஒரு சூழல் வரும் பட்சத்தில், இந்த வார எபிசோட்கள் களைக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X