‘அடிச்சு மண்டைய உடைச்சுடுவேன்’.. கவினை செல்லமாக மிரட்டிய லாஸ்லியா.. இதப் போய் எடிட் பண்ணிட்டீங்களே!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கவினை செல்லமாக லாஸ்லியா மிரட்டும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் மக்களிடம் நல்ல பெயரைப் பெற்று வரும் போட்டியாளர் லாஸ்லியா தான். காரணம் பிக் பாஸ் வீட்டில் அவர் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்குவதில்லை.

தானுண்டு தன் வேலையுண்டு என பிக் பாஸ் வீட்டில் அவர் வலம் வருகிறார். மற்ற போட்டியாளர்கள் ஆவேசமாக சண்டை போட்டு வரும் நேரத்தில்கூட, அவர் கேமரா முன்பு நின்று ஜாலியாக பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்.

லாஸ்லியா ஆர்மி:

லாஸ்லியா ஆர்மி:

முதல் நாளே லாஸ்லியாவுக்கென ஆர்மி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் எபிசோட்களில் அவரது காட்சிகள் குறைவாக இருப்பது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்து வருகிறது. வீட்டில் சும்மா சாப்பிட்டு, தூங்கி என இப்படி இருக்கிறாரே லாஸ்லியா என அவர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

எடிட்டிங்கில் கட்:

எடிட்டிங்கில் கட்:

ஆனால், உண்மை அப்படியில்லை. பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவும் பல சுவாரஸ்யமான தரமான சம்பவங்களைச் செய்து தான் வருகிறார். ஆனால், பிக் பாஸ் என்ன நினைக்கிறார் எனத் தெரியவில்லை. அவற்றை எடிட்டிங்கில் கட் செய்து விடுகின்றனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

வீடியோக்கள்:

வீடியோக்கள்:

ஹாட் ஸ்டார் அல்லது ஹலோ ஆப் மூலம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் எடிட் செய்யாத பல விசயங்களையும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அவற்றில் பல வீடியோக்களை சமூகவலைதளங்களிலும் ஷேர் செய்கின்றனர். அந்த வகையில் கவின், லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

கவின் வம்பு:

கவின் வம்பு:

அதில், வீட்டுக்குள் செல்ல முயலும் லாஸ்லியாவை கவின் உள்ளே விடாமல் வம்பு செய்கிறார். இதனால் செல்லமாக அவரிடம், ‘மண்டையை உடைச்சுடுவேன்' என மிரட்டுகிறார் லாஸ்லியா. ஆனாலும் லாஸ்லியாவை உள்ளே விடாமல், அவர் அழகுத் தமிழில் பேசுவதை ரசித்தபடி உள்ளார் கவின். அப்போது அங்கு முகின்னும், சாக்‌ஷியும் வருகின்றனர்.

வைரல் வீடியோ:

வைரல் வீடியோ:

ஆனாலும், குறுக்கே கையை வைத்துக் கொண்டு லாஸ்லியாவை உள்ளே விட மாட்டேன் என்கிறார் கவின். பின் அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது. சுமார் 2 நிமிடம் ஓடும் அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏம்பா எடிட்டர் ஏன் இந்தக் காட்சிகளை எல்லாம் எடிட் பண்ணிட்டீங்க என செல்லமாக லாஸ்லியா ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X