ஏமாற்றிய பிக் பாஸ்... வைல்ட் கார்ட்டில் வருபவர் நடிகையல்ல.. மலேசியப் பாடகர்.. லீக்கானது போட்டோ!
பிக் பாஸில் 17வது போட்டியாளராக மலேசியப் பாடகர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் மலேசியப் பாடகர் ஒருவர் வர இருப்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி ஆறு வாரங்களைக் கடந்து விட்டது. வீட்டிற்குள் சென்ற 16 போட்டியாளர்களில் இதுவரை நான்கு பேர் வெளியேறி விட்டனர். தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேறி விடுவார்.
இந்த வார நாமினேசனில் சாக்ஷி, கவின், ஷெரீன், அபிராமி மற்றும் மதுமிதா ஆகியோர் பெயர் உள்ளது. இவர்களில் நிச்சயம் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார் அல்லது ரகசிய அறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது. அப்போது வீட்டிலுள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்து விடும்.

17வது போட்டியாளர்:
இந்த சூழ்நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக இந்த வாரம் 17வது போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் எனத் தெரிகிறது. 17வது போட்டியாளர் இவர் தான் இணையத்தில் பலரின் பெயர் யூகங்களாக உலா வந்து கொண்டிருக்கிறது. ஆல்யா மானஸா, ஸ்ரீரெட்டி, கஸ்தூரி என பலரது பெயர் இந்தப் பட்டியலில் உள்ளது.

வைல்ட் கார்ட்:
ஆனால், 17வது போட்டியாளராக இம்முறை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பது மக்கள் எதிர்பார்ப்பது போல் நடிகையல்ல என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, நிகழ்ச்சி ஆரம்பித்த போது, ஏழு ஆண் போட்டியாளர்களும், எட்டு பெண் போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்தனர். பின்னர் அடுத்த நாளில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மீரா சென்றார்.

ஆண் போட்டியாளர்:
இதனால் பிக் பாஸ் வீட்டில் ஒன்பது பெண் போட்டியாளர்களும், ஏழு ஆண் போட்டியாளர்களும் முதல் வாரத்தில் இருந்தனர். இவர்களில் தற்போது மூன்று பெண் போட்டியாளர்களும், ஒரு ஆண் போட்டியாளரும் வெளியேறி விட்டனர். இந்த சூழ்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு ஆண் போட்டியாளர் ஒருவர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வர இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜான்சன் பிலிக்சன்:
மலேசியாவைச் சேர்ந்த நடிகர், பாடகர், நடன ஆசிரியர் என எல்லா துறையிலும் கலக்கி வரும் ஜான்சன் பிலிக்சன் தான் அந்த போட்டியாளர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார் போல் அவர் இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து கிளம்பியுள்ளார், அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி உள்ளது.

பை பை மலேசியா:
மலேசியாவில் இருந்து கிளம்பிய போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘பை பை மலேசியா' என அவர் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது நண்பர்கள், ‘ஆல் தி பெஸ்ட்' என கமெண்டுகள் வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் பதிவேதும் வெளியிடவில்லை. எனவே, அவர் சென்னை வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் எனத் தகவல்கள் பரவி வருகிறது.

வெளிநாட்டு போட்டியாளர்கள்:
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் மலேசியாவைச் சேர்ந்த முகென் தற்போது போட்டியாளராக இருக்கிறார். இம்முறை மலேசியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். லாஸ்லியாவும், தர்ஷனும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்தப் பட்டியலில் ஜான்சனும் சேருவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











