அய்யோ பாவம் இந்த வாரம் இவரையா பிக் பாஸ் வெளியே அனுப்பப் போகிறார்... அப்போ கமலுக்கு திட்டு கன்பார்ம்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எந்தப் போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். போட்டியாளர்கள் நாமினேட் செய்வதை வைத்து, மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த எவிக்ஷன் நடைபெறும். அதன்படி கடந்த வாரம் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் சரவணன், மோகன் வைத்யா, மதுமிதா, வனிதா, மீராமிதுன் ஆகிய ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்பது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.

மோகன் வைத்யா:
ஆனால் அதுபற்றிய தகவல்கள் இன்றே கசிய தொடங்கிவிட்டது. பாத்திமா பாபுவைத் தொடர்ந்து, இந்த வாரம் வயதில் மூத்தவரான மோகன் வைத்யா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. வீட்டிலேயே வயதானவர் என்பதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வனிதா:
பிக் பாஸ் போட்டியாளர்களில் வனிதா மீது தான் பொதுமக்களுக்கு அதிக வெறுப்பு உள்ளது. அடாவடியாக அவர் செய்யும் காரியங்கள் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே வனிதா தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்பாவியான மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இதனால் நெட்டிசன்கள் கமலை திட்டப் போகின்றனர்.

அடுத்து சரவணன்:
அதோடு, அடுத்த வாரம் சரவணன் வெளியேற்றப்படுவார் எனத் தெரிகிறது. ஏற்கனவே அவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தான் கூறி வருகிறார். அதற்கு அடுத்த வாரம் சேரனையும் வெளியேற்றி விட்டு, இளம் வயதினரை மட்டும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள பிக் பாஸ் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

மக்கள் விருப்பம்:
சரியான வழிகாட்டுதல் தர பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் வயதான போட்டியாளர்கள் இருக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அப்படி இல்லாவிட்டால் இளம் போட்டியாளர்கள் அத்துமீற வாய்ப்புகள் அதிகமாகி விடும். எனவே, இதைக் கருத்தில் கொண்டாவது பிக் பாஸ் வயதான போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வைக்க வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை.


Click it and Unblock the Notifications











