அப்பாஸுக்கும், லாஸ்லியாவுக்கும் இப்டி ஒரு கனெக்சனா.. இது கவினுக்கு மட்டும் தெரிஞ்சா என்ன ஆகுமோ?

லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 :Day 38 : கவினுக்காக அடித்துக்கொள்ளும் லாஸ்லியா-சாக்ஷி- வீடியோ

சென்னை: லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பித்து ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதென்றால், அவரை வைத்து மீம்ஸ் செய்வதற்கென்றே மற்றொரு கூட்டம் சமூகவலைதளத்தில் உள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியதுமே மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றவர் லாஸ்லியா தான். துறு துறு நடவடிக்கைகளாலும், அழகான தோற்றத்தாலும் இவருக்கு ஆர்மி எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது. இவர் தான் அடுத்த ஓவியா என்ற பேச்சுகூட எழுந்தது.

ஆனால், பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலான பிரச்சினைகளில் இருந்து விலகியே இருப்பதால், வர வர இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து வருகிறது. அதோடு, கவினோடு காதல் பிரச்சினையில் சிக்கியதாலும் அவரது ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

குறையும் ஆதரவு:

குறையும் ஆதரவு:

இதனால் நாளுக்கு நாள் லாஸ்லியாவுக்கான ஆதரவு குறைந்து வருவதை சமூகவலைதளங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் ‘லாஸ்லியா சார்.. பேசுது சார்.. சிரிக்குது சார்..' என பார்த்திபன் ரேஞ்சுக்கு நிறைய மீம்ஸ்களை பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக லாஸ்லியாவைக் கலாய்க்கும்படியான மீம்ஸ்கள் தான் அதிகமாக வருகிறது.

ஜானு டிரஸ்:

ஜானு டிரஸ்:

அதிலும் நேற்று போடு ஆட்டம் போடு டாஸ்க்கில் லாஸ்லியா, 96 பட ஜானு திரிஷா மாதிரி உடையணிந்திருந்ததை ரூம் போட்டு கலாய்த்தனர் நெட்டிசன்கள். உடை தான் மொக்கையாக இருந்ததே தவிர அவரது நடனம் வழக்கம் போல் நன்றாகவே இருந்தது. ஆனால் அதையும் எப்போதும் போடும் அதே ரெண்டு ஸ்டெப்ஸ் தான் என சிலர் கலாய்த்திருந்தனர்.

இது ஆப்-ஆ.. இல்ல ஆப்பா?

இது ஆப்-ஆ.. இல்ல ஆப்பா?

இந்நிலையில், பேஸ் ஆப் மூலம் லாஸ்லியாவின் புகைப்படத்தை ஆண் தோற்றத்திற்கு மாற்றி யாரோ ஒரு நெட்டிசன் விஷப் பரீட்சை செய்து பார்த்துள்ளார். ஆனால், லாஸ்லியா புகைப்படத்தை ஆணாக மாற்றினால், அங்கே அப்பாஸ் முகச் சாயல் இருப்பதைப் பார்த்து நிச்சயம் அவரே மயக்கம் போட்டிருப்பார்.

நெட்டிசன்கள்:

நெட்டிசன்கள்:

தற்போது அந்தப் புகைப்படத்தை வைத்து வழக்கம் போல் நெட்டிசன்கள் மீம்ஸ் தயாரித்துள்ளனர். அப்பாஸ் தம்பிக்குத் தான் பெண் வேடம் போட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டனர் என இந்த மீம்ஸை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தைப் பார்த்தால் நமக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த மீம்ஸைப் பார்த்த நெட்டிசன்கள், ‘அட இது தெரியாம கவின் வேற லாஸ்லியா பின்னாடியே சுத்திட்டு இருக்கானே' எனக் கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X