'சைத்தான் கிப்ட்பாக்ஸ்ல வந்திருக்கு அவ்வ அவ்வ...' பிக் பாஸ் வீட்ல இது யாரோட மைண்ட்வாய்ஸ்னு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி செய்யும் ரகளைகளை வைத்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை கஸ்தூரி சென்றுள்ளதை வைத்து நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸாக சென்றுள்ள நடிகை கஸ்தூரிக்கு, அங்குள்ள போட்டியாளார்களின் குணங்கள், ஸ்ட்ராடஜி பற்றி எல்லாம் தெளிவாக தெரியும். தனது டிவிட்டர் பக்கத்தில் தினமும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமயங்களில் போட்டியாளர்களின் செய்கைகள் குறித்து காட்டமாக விமர்சிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள அவர், போட்டியாளர்களை டிரில் வாங்கி வருகிறார். கிப்ட் பாக்சில் இருந்து வெளியில் வந்த உடனேயே சாக்ஷியை டார்கெட் செய்தார் கஸ்தூரி. பின்னர் சேரன், தர்ஷன், ஷெரீனுடன் ஆகியோரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தார்.
அடுத்த பலிகடா:
கஸ்தூரியின் வருகையால் பிக் பாஸ் வீடே களைகட்டியிருக்கிறது. ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் பாவம் என சிலர் பதிவிட்டுள்ளனர். மற்றவர்களோ, பிக் பாஸ் டிஆர்பிக்காக கஸ்தூரியை பலிகடாவாக்கியிருப்பதாக நக்கலடித்துள்ளனர்.
சாண்டி ரியாக்ஷன் :
இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் கஸ்தூரி, சேரனிடம் மீரா பத்தி பேசிக் கொண்டிருக்கும் போது, சாண்டி ஒரு ரியாக்ஷன் கொடுத்திருப்பார். அதற்கு அர்த்தம் என்ன என தேடி கண்டுபிடித்து சில நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட்டி செய்துள்ளனர். வடிவேலுவுடன் அவரது ரியாக்ஷனை பொருத்தி, "இந்த அம்மாகிட்ட அடக்கி வாசிக்கனும் போல", என சாண்டி யோசிப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.
சாக்ஷி மைண்ட் வாய்ஸ் :
இதில் அல்டிமேண்ட் கமெண்ட் என்னவென்றால், கஸ்தூரி உள்ளே நுழைந்ததும் முதலில் டார்கெட் செய்தது சாக்ஷியை தான். 'உங்ககிட்ட நிறைய கேள்வி கேட்கணும்' என சாக்ஷியிடம் கஸ்தூரி கூறினார். அதை வைத்து ஒருவர், சாக்ஷி மைண்ட் வாய்ஸ் எனக்கூறி, "சைத்தான் வருது அவ்வ அவ்வ... கிப்ட் பேக்ல வந்திருக்கு அவ்வ அவ்வ", என கமெண்ட் அடித்துள்ளார்.
மங்காத்தா டயலாக் :
மங்காத்தா படத்தில் அஜித்து கூறும் டயலாக்கை லேசாக மாற்றி, 'இனி நைட் பிக் பாஸ் பார்க்கக்கூடாது' என தல சொல்லுவது போல் மீம்ஸ் உருவாக்கியுள்ளார் இவர். பெரும்பாலான பிக் பாஸ் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் தான் இது.
அய்யோ சித்தப்பு :
1992ம் ஆண்டு வெளியான, சரவணன் - கஸ்தூரி நடித்த அபிராமி படத்தின் ஒரு பாடல் காட்சியை பதிவிட்டு, "அய்யோ சித்தப்பு இப்ப பார்த்து நீ இல்லாம போய்ட்டியே", ஒரு ரசிகர் கதறியுள்ளார். சாண்டியைவிட சித்தப்பு மேல பாசமா இருக்காரே இந்த ரசிகர்.
சைத்தான் சைக்கிளில் வருது:
"இன்னைல இருந்து தான் உண்மையான வேடிக்கை ஆரம்பம். அநேகமா இரண்டாவது புரொமோலயே பத்திக்குமோ", என டவுட்டாகியுள்ள இவர், வடிவேலுவின் போட்டோவை போட்டு, "சைத்தான் சைக்கிளில் வருது" எனும் சாக்ஷி மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











