நீங்க லேசுபீஸு இல்ல ரேஷ்மா.. செம வெயிட்டு பீஸு.. பிக் பாஸ் வரலாற்றுல இப்டி ஒரு சாதனை பண்ணிட்டீங்களே!

பிக் பாஸ் வரலாற்றில் சாதனை ஒன்றைச் செய்துள்ளார் ரேஷ்மா.

சென்னை: பிக் பாஸ் வரலாற்றிலேயே மிக முக்கியமான சாதனை ஒன்றை செய்து, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் ரேஷ்மா.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் ரேஷ்மா. இது நிச்சயம் மக்களை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம் இந்த வாரம் எப்படியும் சாக்‌ஷியைத் தான் வெளியேற்ற வேண்டும் என மக்கள் விரும்பினர். இது வாக்குப் பதிவிலேயே நன்றாகத் தெரிந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ரேஷ்மா பேரை கமல் கூறியதும், பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல, மக்களும் சோகமாயினர்.

முகென் அப்செட்:

முகென் அப்செட்:

அதிலும் குறிப்பாக முகென் ரொம்பவே அப்செட் ஆனார். செல்பி எடுத்தபோதுகூட அவர் கண்ணீர் வழிய அழுது கொண்டு தான் போஸ் கொடுத்தார். அதற்கு முக்கியக் காரணம் இந்த வாரம் ரேஷ்மாவின் பேரை அவரும், சேரனும் தான் நாமினேட் செய்திருந்தார்கள். பிக் பாஸ் வீட்டில் தாய், மகனாகத் தான் முகெனும், ரேஷ்மாவும் பழகி வருகின்றனர்.

குற்றவுணர்ச்சியில் அழுகை:

குற்றவுணர்ச்சியில் அழுகை:

விளையாட்டாக தவறான புரிதலால் ரேஷ்மா பேரை நாமினேட் செய்து விட்டார் முகென். அதை நினைத்து அவர் கடந்த ஒரு வாரமாக அவர் மிகவும் மனம் வருந்திக் கொண்டு தான் இருந்தார். தற்போது தன்னால் தான் ரேஷ்மா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கிறார் முகென்.

ரேஷ்மாவின் சாதனை:

ரேஷ்மாவின் சாதனை:

ஆனால், அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகப் பெரிய சாதனை ஒன்றைச் செய்து விட்டு ரேஷ்மா வெளியேறி இருக்கிறார் என்பது. ஆமாம், ரேஷ்மாவைக் காப்பாற்ற சுமார் ஒரு கோடியே 32 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அவருக்கு முந்தைய இடத்தில் இருந்த போட்டியாளரும் ஒரு கோடியே 32 லட்சம் வாக்குகள் தான் பெற்றிருந்திருக்கிறார். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே ரேஷ்மா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

கமல் பாராட்டு:

கமல் பாராட்டு:

இதனை பிக் பாஸ் மேடையிலேயே வெளிப்படையாகக் கூறிய கமல், ரேஷ்மாவை சில காரணங்களுக்காக பாராட்டவும் செய்தார். 1999ம் ஆண்டு மீடியாவிற்கு வந்த போதும், மக்களுக்கு தன் சொந்த வாழ்க்கை பற்றித் தெரியாது எனக் கூறிய ரேஷ்மா, இந்த நிகழ்ச்சி மூலம் வெளி உலகுக்கு அது தெரிய வந்துள்ளதாகக் கூறினார்.

ரேஷ்மா அறிவுரை:

ரேஷ்மா அறிவுரை:

அதோடு, ‘குடும்ப வன்முறைகளுக்குப் பயந்து பெண்கள் தங்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை, குழந்தைகளுக்காக நிர்பந்தமாக வாழத் தேவையில்லை. தனியா குழந்தைகளை வளர்க்க முடியும் என்ற கருத்தை மக்களிடம் கூறவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக' ரேஷ்மா தெரிவித்தார். இதைக் கேட்டு அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி பாராட்டினர்.

முகென் உருக்கம்:

முகென் உருக்கம்:

பின்னர், ‘முன்கூட்டியே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டோம் எனக் கவலை படத் தேவையில்லை. நிறைய வெற்றிகள் அவருக்காக காத்துக் கொண்டிருப்பதாக' ரேஷ்மாவை வாழ்த்தி அனுப்பி வைத்தார் கமல். அகம் டிவி வழியே பேசிய முகென், ‘தானும் ரேஷ்மாவுக்கு எப்போதும் ஒரு மகன் தான்' என உருக்கமாகக் கூறினார்.

நடுநிலையானவர்:

நடுநிலையானவர்:

வனிதா வெளியேறிய போது மக்கள் மத்தியில் எப்படி அவருக்கு பிக் பாஸ் ஒரு நல்ல பேரை ஏற்படுத்தித் தந்தாரோ, அதேபோன்று தான் ரேஷ்மா விசயத்திலும் நடந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்த போதும் ரேஷ்மா, நடுநிலையாகத் தான் இருந்தார். அவ்வளவாக அவர் எந்தப் பிரச்சினையிலும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X