சாரி கேட்ட கவின்.. செருப்படி பதில் கொடுத்த சாக்ஷி அப்பா... தீதும் நன்றும் பிறர்தர வாரா..!
Recommended Video
சென்னை: மன்னிப்பு கேட்ட கவினுக்கு, சாக்ஷியின் தந்தை கொடுத்த பதில் செருப்பால் அடித்தது போல் இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சாக்ஷி வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக அவர் சீக்ரெட் ரூமில் வைக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மற்றப் போட்டியாளர்களை போலவே நேற்று அவரும் வெளியே அனுப்பப்பட்டார்.
அப்போது கமல் முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய தனது அனுபவங்களை சாக்ஷி பகிர்ந்து கொண்டார். பின்னர் அகம் டிவி வழியே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்ற போட்டியாளர்களுடன் பேசும் வாய்ப்பு சாக்ஷிக்கு அளிக்கப்பட்டது.

மன்னிப்பு கேட்ட கவின்
ஒவ்வொருவருடனும் சாக்ஷி பேசினார். அப்போது சோகமாக அமர்ந்திருந்த கவின் சாக்ஷியிடம் மீண்டும் மன்னிப்பு கோரினார். சாரி மச்சான் என கவின் கூறினார். அப்போது குறிக்கிட்டு பேசிய சாக்ஷியின் தந்தை, "இவர் ஏன் சாரி கேட்கிறார்?" என எதிர்கேள்வி எழுப்பினார். அந்த கேள்வியை கமல் கவினிடம் எடுத்துக்கூறினார். அதற்கு பதில் அளித்த கவின், "சாக்ஷியை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டேன்" என்றார்.

சாக்ஷியின் தந்தை
அதை கேட்டு "இது வெறும் விளையாட்டு தானே. எதற்காக கவின் மன்னிப்பு கேட்க வேண்டும்?" என சாக்ஷியின் தந்தை கூறினார். இந்த வார்த்தைகளை நிச்சயம் அவர் பெருந்தன்மையாக கூறவில்லை. கோபத்தோடு தான் கூறினார் என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

சாக்ஷி தந்தை கோபம்
தன் தந்தையின் இந்த பதிலால் சாக்ஷி மகிழ்ச்சி அடைந்தார். மேடையிலேயே அவர் தந்தைக்கு நன்றி தெரிவித்தார். மக்களும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் பெரும் அவமானடைந்தார் கவின். அவரது முகம் சுருங்கிவிட்டது.

சரியான செருப்படி
இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கவினுக்கு சாக்ஷியின் அப்பா சரியான செருப்படி கொடுத்துவிட்டதாக அவர்கள் கமெண்ட் செய்துள்ளனர். பெண்களை விளையாட்டு பொருளாக நினைப்பவர்களுக்கு கவினின் பிக் பாஸ் வாழ்க்கை ஒரு நல்ல பாடமாக அமைய வேண்டும் என்பது தான் அவர்களது கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











