மன்னிப்பு கேட்க.. சரவணனை சேரன் காலில் விழவைத்த கமல்.. இந்த சாட்டையடியைதான் நாங்க எதிர்பார்த்தோம்!

சேரனிடம் சரவணனை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் கமல்.

சென்னை: சேரனை பற்றி மரியாதைக் குறைவாக பேசியது தொடர்பாக, சரவணனை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் கமல்.

போன வாரம் சேரன் மீது தரக்குறைவாக புகார் கூறி மீரா பரபரப்பை ஏற்படுத்தினார் என்றால், இந்த வாரம் சரவணன் வேறு மாதிரி தரக்குறைவாகப் பேசி அதிர்ச்சி அளித்திருக்கிறார். சேரனைப் பற்றி அப்படி பேசியதற்கு காரணமாக சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.

ஆனால், இந்த சம்பவம் மக்களால் ரசிக்கும்படி இல்லை. எனவே, இதற்கு எதிராக சமூகவலைதளங்களில் கண்டனக்குரல்கள் எழுந்தன. வெளியில் நாம் எவ்வளவு கத்தினாலும் அது வீட்டின் உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியப் போவதில்லை. கமல் மட்டுமே நமது பிரதிநிதியாக தவறு செய்யும் போட்டியாளர்கள் மேல் சாட்டையைச் சுழற்றுவார்.

இந்த வாரமும் அதே போல், சரவணன் மீது அவர் சாட்டையை சுழற்றியிருப்பது இரண்டாவது புரொமோ மூலம் தெரிய வந்துள்ளது.

சேரன்:

சேரன்:

‘நான் ஹீரோவா இருந்தப்போ அவர் அசிஸ்டெண்ட் டைரக்டர். என் வீட்டு ஹால்ல வந்து உட்கார்ந்திருப்பார்' என சரவணன் நேற்றைய எபிசோட்டில் பேசி இருந்தார். அதோடு, ‘தான் படமில்லாமல் இருந்த போது, வாய்ப்பு கேட்டதற்கு சேரன் தரவில்லை' எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

கமல் கண்டிப்பு:

கமல் கண்டிப்பு:

இதையெல்லாம் குறிப்பிட்டு இன்று நிகழ்ச்சியில் சரவணனை கமல் கண்டித்திருக்கிறார். அது தொடர்பான காட்சிகள் புரொமோவில் உள்ளது. வழக்கம் போல், கமல் சரவணனை திட்டிக் கொண்டிருக்கும் போது, அமைதியாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் தான் அமர்ந்திருக்கிறார் சேரன்.

மன்னிப்பு கேட்ட சரவணன் :

மன்னிப்பு கேட்ட சரவணன் :

பின்னர் சமையலறைப் பகுதியில் சரவணன் இது தொடர்பாக சேரனிடம் மன்னிப்பு கேட்கிறார். சேரனின் காலில் அவர் விழப் பார்க்கிறார். அதனை சேரன் தடுக்கிறார். ஆனாலும் பிடிவாதமாக மீண்டும் அவரது காலில் விழ முயற்சிக்கிறார். பின்னர் இருவரும் சமாதானமாக கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர்.

காதல் பிரச்சினை:

காதல் பிரச்சினை:

இந்த புரொமோ மூலம் கொடுப்பதைக் கொடுத்து போட்டியாளர்களை ஒரு வழி செய்து விட்டார் கமல் என்பது தெரிய வருகிறது. அடுத்ததாக கவின் காதல் பிரச்சினையையும் அவர் இதே போல் தீர்த்து வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முதல் புரொமோவில் அதனை அவர் மறைமுகமாகப் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X