இன்னைக்கும் நைசா நழுவிடுவாரோ கமல்.. அப்போ ஹவுஸ்மேட்ஸும், மக்களும் காத்திருந்தது எல்லாம் வீண்தானா?

இன்றைய புரொமோக்களில் சரவணன் வெளியேற்றம் பற்றி கமல் பேசாதது ஏமாற்றமளித்துள்ளது.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள மூன்று புரொமோக்களிலும் சரவணன் விவகாரம் குறித்து கமல் பேசாதது மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் நடிகர் சரவணன். ஆனால் இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ்க்கு தெரியாது.

சரவணன் ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து சனிக்கிழமை ஒளிப்பரப்பாகும் எபிசோடில் கமல் கூறுவார் என பிக் பாஸ் தெரிவித்திருந்தார். எனவே இன்றைய எபிசோடில் கமல் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நட்பு:

இந்நிலையில் இன்று மதியம் வெளியான முதல் புரொமோவில் பிரெண்ஷிப் பற்றி பேசினார் கமல். அபிராமி - முகென், கவின் - லாஸ்லியா, சாக்ஷி - முகென், ஷெரீன் - தர்ஷன் என ஜோடியாக இருக்கும் காட்சிகளை காண்பித்து, நட்பை வகைப்படுத்தி பேசினார். எனவே முக்கோண காதலில் இருந்து நட்புக்கு தாவியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

கஸ்தூரி:

இரண்டாவது புரொமோவில், யார் உங்கள் ஹீரோ என கஸ்தூரியிடம் கமல் கேட்கிறார். அதற்கு அவர், தர்ஷனையும், ஷெரீனையும் அழைத்து மாலை மாற்றிக்கொள்ள சொல்கிறார். பிறகு கமலை கைக்காட்டி நீங்கள் தான் என் ஹீரோ என்கிறார். இதையடுத்து நீங்கள் வீட்டுக்கு போகும் போது மாலையோடு அனுப்பி வைக்க சொல்கிறேன் என கஸ்தூரியிடம் கூறுகிறார் கமல்.

கிரீடம்:

மூன்றாவது புரொமோவில் வீட்டில் உள்ளவர்களுக்கு யார் யாருக்கெல்லாம் தேவதை மற்றும் சாத்தான் கிரீடம் கொடுப்பீர்கள் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அனைவரும் தங்கள் மனதுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத போட்டியாளர்களுக்கு அந்த கிரீடங்களை அனுபவிக்கின்றனர்.

சரவணன் விவகாரம்:

சரவணன் விவகாரம்:

இப்படியாக மூன்று புரொமோவிலுமே சரவணன் விவகாரம் பற்றி கமல் எதுவுமே பேசவில்லை. இது ஏன் எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சரவணன் விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்ட ஒரு விஷயம். இன்று அதைப்பற்றி பேசியது குறித்து புரொமோவில் காட்டாமல், வழக்கமான மசாலா படங்களையே பிக் பாஸ் காட்டுவது ஏன் எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அப்படியானால் அந்த விவகாரத்தைப் பட்டும் படாமல் காண்பித்து விட்டு நம்மவர் நழுவி விடுவார் எனத் தெரிகிறது. அவரை ஒருமையில் பேசியதால் தான் சரவணன் வெளியேற்றப்பட்டார் என்ற பேச்சும் உள்ளது. அதுபற்றியும் கமல் ஏதும் விரிவாக பேச மாட்டார் என்றே இன்றைய புரொமோக்கள் சொல்லாமல் சொல்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X