சேரன் நீங்க இவ்வளவு சுயநலவாதியா.. சரவணனை வாண்டடாக வம்புக்கு இழுத்து அசிங்கப் படுத்திட்டீங்களே!
சேரன் தான் சரவணனை வாண்டடாக வம்புக்கு இழுத்தது எபிசோடில் நன்றாகவே தெரிந்தது.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரொமோவில் பார்த்தது போல் எபிசோடில் சேரன், சரவணன் இடையேயான அந்த சண்டை இருக்கவில்லை.
நேற்று வெளியான பிக் பா ஸ் புரொமோக்களில் சரவணனும் சேரனும் மோதிக்கொள்வது போல் காட்சிகள் இருந்தன. சேரனை சரவணன் அவன் , இவன் என ஏகவசனத்தில் பேசுவது போலவும், லூசு என திட்டுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
சேதிய விருது வாங்கிய ஒரு பெரிய இயக்குனரை இப்படியா பேசுவது என இந்த புரொமோக்களை பார்த்த நெட்டிசன்கள் பொங்கி எழுந்தனர். சரவணனுக்கு ரெட் காட்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் எனும் ரேஞ்சுக்கு அவர்களது பதிவுகள் இருந்தன.
ஆனால் நேற்றைய எபிசோடில் இருந்த காட்சிகளே வேறு. சும்மா இருந்த சரவணனை சேரன் தான் வான்டடாக வம்புக்கு இழக்கிறார். அவராக தான் சரவணனை கோபப்படுத்தி அவரை பேச வைத்தது எபிசோடில் அப்பட்டமாக தெரிந்தது.

டாஸ்க்:
எல்லா டாஸ்களையும் போலவே இந்த வாரமும் சரியாக விளையாடாத போட்டியாளர் பெயரை கூறும்படி பிக் பாஸ் கேட்டுக்கொண்டார். அப்போது, முதலில் சாண்டி சேரனின் பெயரை தான் கூறினார். அடுத்தடுத்து பேசியவர்கள் ஷெரின், சாக்ஷி, லாஸ்லியா, தர்ஷன், முகென் என பலரது பெயர்களை கூறினர்.

தவிப்பு:
தர்ஷனும், லாஸ்லியாவும் தங்களுது பெயர்களையே கூறினர். ஆனால் சேரனோ பிடிவாதமாக சரவணன் பெயரை தான் தொடர்ந்து வலியுறுத்தினார். மற்றவர்களும் அவரது பெயரையே கூற வேண்டும் என அவர் கட்டாயப்படுத்தியது மாதிரி இருந்தது. இதனால் மோசமான போட்டியாளரை தேர்வு செய்ய முடியாமல் ஹவுஸ்மேட்ஸ் தவித்தனர்.

கேப்டன் முடிவு:
கன்ஃபஷன் ரூமுக்கு கேப்டன் தர்ஷனை அழைத்து, இதுதொடர்பாக கருத்து கேட்டார் பிக் பாஸ். அப்போதும் தர்ஷன் தன்னுடைய பெயரையே வலியுறுத்தினார். இதனால் தர்ஷனை வெளியில் சென்று அனைவர் முன்னிலையிலும் தன்னுடைய முடிவுகளை அறிவிக்கும்படி பிக் பாஸ் உத்தரவிட்டார். தலைவர் சொல்லும் பெயரே இறுதியானது என்றும் அறிவித்தார்.

சிறை தண்டனை:
கடைசியில் ஒருவழியாக லாஸ்லியா மற்றும் ஷெரின் சிறைக்கு செல்வது என முடிவானது. அப்போதும் சேரன் இந்த பிரச்சினையை விடுவதாக இல்லை. இந்த முடிவை அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும். எப்படியாவது சரவணனை சிறைக்கு அனுப்பிவிட என்பதிலேயே அவர் குறியாக இருந்தார்.

திட்டிய சரவணன்:
இதனால் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சரவணன் சேரனுக்கு எதிராக சத்தமாக பேசினார். அப்போதும் கூட அவர், தர்ஷனை தான் வாயா போயா என மரியாதை இல்லாமல் குறிப்பிட்டார். ஆனால் சேரனோ அவர் தன்னை தான் அப்படி கூறுகிறார் என தெரிவித்தார். சக போட்டியாளர்கள் எடுத்துக்கூறியும் அவர் விடுவதாக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரை லூசு என திட்டினார்.

கேப்டன் டயலாக்:
உண்மையில் இந்த டாஸ்கில் மற்றவர்களைவிட சரவணனே சிறப்பாக விளையாடினார் நாம் கண்கூடாக பார்த்த உண்மை. அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்தை ஒத்திருந்த அவருடைய உடல்வாகு. இடையிடையே கேப்டன் போலவே தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்க போன்ற டயலாக்குகளையும் பேச அவர் மறக்கவே இல்லை.

தப்புக்கணக்கு:
இப்படி இருக்கையில் சேரன், தொடர்ந்து ஏன் சரவணனை சிறைக்கு அனுப்பதிலேயே குறியாக இருந்தார் என தெரியவில்லை. ஒருவேளை பிக் பா ஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பு அவர்களுக்குள் இருந்த முன்பகையும் காரணமாக இருக்கலாம். இல்லை போன வாரம் மீராவை வைத்து மக்களிடம் ஆதரவைப் பெற்றது போல, இம்முறையும் தனக்கு கிடைக்கும் என சேரன் நினைத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications











