பொம்பளைங்க சண்டை போர் அடிக்குது.. டக்கென ஸ்கிரிப்டை மாற்றிய பிக் பாஸ்.. அடுத்து என்ன அடிதடி தான்!
பிக் பாஸ் வீட்டில் காதல் பிரச்சினை போர் அடிப்பதால், அடுத்ததாக டிஆர்பியைக் கூட்ட சேரன், சரவணன் மோதல் தொடங்கியுள்ளனர்.
Recommended Video
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இதுவரை பெரும்பாலும் பெண்களுக்குள்ளேயே சண்டை நடந்து வந்தது. இது பார்ப்பவர்களுக்கு போர் அடிப்பதால், தற்போது ஆண்களை அடித்துக் கொள்ள வைத்துள்ளார் பிக் பாஸ்.
பிக் பாஸ் முதல் சீசனில் பெரும்பாலும் பெண் போட்டியாளர்களுக்கு இடையே தான் சண்டை அதிகமாக இருந்தது. ஆண் போட்டியாளர்கள் பார்வையாளர்களாகவே இருந்தனர். ஆனால் இரண்டாவது சீசனில் ஆண் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் மஹத், டேனியை அடித்து காயப்படுத்தியதால், பிரச்சினை பெரிதானது. கமலும் ரெட் கார்ட் கொடுத்து மஹத்தை வெளியே அனுப்பினார்.

டிஆர்பி:
இந்த சீசனிலும் அப்படி ஏதாவது அடிதடிக்கு பிக் பாஸ் பிளான் வைத்திருக்கிறார் போல. ஆனால் ஆரம்பத்திலேயே அதனை கொண்டு வராமல், பெண் போட்டியாளர்களை மோத விட்டு, டிஆர்பியை ஏற்றினார். அதிலும் காதல் விவகாரம், பாலியல் புகார் என விதவிதமாக பிரச்சினைகள் உருவானது.

காதல் பிரச்சினை:
கடந்த சில நாட்களாக சாக்ஷியும், லாஸ்லியாவும் கவினுக்காக வாய்ச் சண்டை போட்டு வருவது மக்களை வெறுப்படைய வைத்துள்ளது. எப்படியும் இந்த வாரம் இவர்களில் ஒருவரைத் தான் பிக் பாஸ் வெளியேற்றுவார் எனத் தெரிகிறது. கவினும், சாக்ஷியும் நாமினேஷனில் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரையுமே வெளியில் அனுப்பி விடுங்கள் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர்.

சரவணன் மோதல்:
இப்படியே நிலை தொடர்ந்தால், தனது டிஆர்பி பாதிக்கும் என்ற பயம் பிக் பாஸுக்கு வந்து விட்டது போல. எனவே, அதிரடியாக ஸ்கிரிப்டை மாற்றி, சரவணனுக்கும், சேரனுக்கும் சண்டையை மூட்டி உள்ளார். அதிலும் சரவணன் ஆரம்பத்தில் இருந்தே சேரனைப் பற்றி மறைமுகமாகப் புறணி பேசி வருகிறார். இன்று வெளிப்படையாகவே அவருடன் மோதி விட்டார்.

அடுத்து அடிதடி?
இதன் அடுத்தகட்டமாக அவர் சேரனை அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏற்கனவே, மீரா விவகாரத்தில் சேரன் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது. கடந்த வாரம் சரவணன் பெண்களைப் பற்றி பேசியது ஏற்கனவே சர்ச்சையை உண்டாக்கியது. எனவே, சேரனையும், அவரையும் மோதவிட்டு, சரவணனை வெளியில் அனுப்ப பிக் பாஸ் திட்டமிடுகிறார் போலும்.

எல்லாம் ஸ்கிரிப்ட் தான்:
எது எப்படியோ எபிசோட்கள் சுவாரஸ்யமாக இருந்தால் சரி என்பது தான் மக்களின் கருத்தாக உள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் நடப்பவை எல்லாமே ஸ்கிரிப்ட் தான் எனக் கூறப்படுகிறது. காசை வாங்கிக் கொண்டு காதலிப்பது போலவும், சண்டை போடுவது போலவும் போட்டியாளர்கள் நடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











