‘சேரன் மேல பொறாமை.. அதான் இப்டி ரௌடி மாதிரி நடந்துக்கறார்’.. சரவணனை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

பிக் பாஸ் புரொமோவைப் பார்த்து விட்டு சரவணனை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1: Day:40 : Chithappu slams Cheran : சேரனுக்கு மரியாதை கொடுக்காத சித்தப்பு

சென்னை: சேரனிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்ட சரவணனுக்கு, கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக் பாஸ் வீடென்றாலே வர வர குஸ்திக் களம் மாதிரி ஆகி விட்டது. யாராவது ஏதாவது விசயத்திற்காக எப்போதும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக காதல் விவகாரம் தொடர்பாக காரசாரமாக பேசி, கண்ணீர் வடித்து வந்தனர்.

இன்றைய புரொமோவில், சேரனுக்கும், சரவணனுக்கும் மோதல் ஏற்பட்டிருப்பது போல் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. வழக்கம்போல் சேரன் இதிலும் அமைதியாகவே இருக்க, சரவணன் கோபத்தோடு அடிக்க வருவது போல் முன்னேறிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரடித் தாக்குதல்:

நேரடித் தாக்குதல்:

ஆரம்பத்தில் இருந்தே சேரனுக்கும், சரவணனுக்கும் பிடிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் சேரனுக்கு எதிராக மீரா வெளிப்படையாக சண்டை போட்டார் என்றால், மறைமுகமாகப் புறணி பேசி வந்தவர் சரவணன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் சேரனைப் பற்றி அவர் ஏதாவது புகார் சொல்லியபடியே இருந்தார். இன்றைய எபிசோட்டில் சேரனிடம் அவர் முகத்துக்கு நேராகவே சண்டை போடுவது போல் உள்ளது.

அதிர்ச்சி:

அதிர்ச்சி:

ஆனால், சரவணனின் இந்த நடவடிக்கைகள் மக்களுக்குப் பிடிக்கவில்லை. வீட்டில் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் நடுநிலையாளராக நடந்து வந்த சரவணன், மீரா - சேரன் விசயத்தில்கூட நல்ல விதமாகவே பேசினார். ஆனால், தற்போது மட்டும் வேறு மாதிரியாக நடந்து கொண்டுள்ளார். இது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விமர்சனம்:

விமர்சனம்:

ஏற்கனவே சுடுகாடு டாஸ்க்கின் போது சரவணன் சரியாக நடிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. ஆனால் அப்போது முதலில் அமைதியாக இருந்தவர், பின்னர் தான் பொங்கினார். அப்போது சேரன் சிறைக்குச் சென்றார். ஆனால் இம்முறை சேரனிடம் அவர் நேரடியாகவே மோதியுள்ளார். திரைத்துறையில் இருக்கும் பக்குவமான நடிகரான சரவணனின் இந்த நடவடிக்கையை சரியில்லை என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

ரௌடி மாதிரி:

அடிப்பது போல் பாய்ந்த சரவணனின் நடவடிக்கை ரௌடி மாதிரி இருப்பதாகவும், இந்த வாரம் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

காட்டமான பதிவு:

சேரனை சரவணன் திட்டியதைப் பார்த்து இந்த ரசிகருக்கு ரத்தக் கொதிப்பே வந்துவிட்டதாம். இவரெல்லாம் ஒரு ஆள் என எப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பினார் என காட்டமாக பதிவு வெளியிட்டுள்ளார். சேரன் மீதுள்ள பொறாமையில் தான் சரவணன் இப்படி எல்லாம் பேசுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

ஊருக்குத் தான் அட்வைஸ்:

மத்தவங்க பிரச்சினைனு வரும் போது ஈஸியாக சரவணன் அட்வைஸ் பண்ணுவாரு. ஆனால் அவருக்குனு ஒரு பிரச்சினை வந்தா, அவரு கண்ட்ரோல் இல்லாம, மரியாதை இல்லாம பேசுவாரு' என சரவணனின் நடவடிக்கைகள் பற்றி இவர் கோபமாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X