இருக்கு இன்னைக்கு ‘நம்மவர்’கிட்ட செம டோஸ் இருக்கு.. ஹவுஸ்மேட்சை லெப்ட் அண்ட் ரைட் வாங்க போகும் கமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய கமல் புரொமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Big Boss 3 Tamil Day 41 : Promo 1 : புதிய தோற்றத்தில் வந்த கமல்..என்ன பன்ன காத்திருக்கார்?

சென்னை: இன்றைய எபிசோட்டில் சரவணன் - சேரன் மோதல், கவின் காதல் பிரச்சினை போன்றவற்றைப் பற்றி கமல் காரசாரமாகப் பேசுவார், தவறு செய்தவர்கள் தலையில் நச்சென குட்டுவார் என்பது புரொமோ மூலம் தெரிய வந்துள்ளது.

வார இறுதி நாட்கள் வந்து விட்டது என்றாலே பிக் பாஸ் ரசிகர்களுக்கு தனியாக ஒரு தெம்பு வந்து விடும். காரணம் கமல். வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களைப் பார்த்து, நாம் கேட்க நினைத்ததை எல்லாம், நம் பிரதிநிதியாக அவர் கேட்டு விடுவார்.

இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.. என கமல் போட்டியாளர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் போது மக்களுக்கு என்னமோ தாங்களே பேசியது போன்ற திருப்தி வந்துவிடும்.

அடுத்தடுத்து பிரச்சினைகள்:

அடுத்தடுத்து பிரச்சினைகள்:

பிக் பாஸ் வீட்டில் முந்தைய வாரங்களில் பெரும்பாலும் ஏதாவது ஒரு பிரச்சினை தான் பரபரப்பாக இருந்தது. ஆனால் இந்த வாரமோ கண்டெண்ட்டுக்கு கொஞ்சமும் குறைவில்லை. சாக்‌ஷி, கவின், லாஸ்லியா காதல் பிரச்சினை, போடு ஆட்டம் போடு டாஸ்க்கில் யார் சரியான போட்டியாளர் இல்லை என்ற பிரச்சினை, சேரன் - சரவணன் மோதல் என வாரம் முழுவதுமே ஒரே பஞ்சாயத்தாகத்தான் இருந்தது.

சண்டையோ சண்டை:

சண்டையோ சண்டை:

ஒரே பிரச்சினையை வைத்து ஜவ்வாக இழுக்காமல், விதவிதமாக சண்டை போட்டு கமலுக்கு இந்த வாரம் நிறையவே வேலை கொடுத்துள்ளனர் போட்டியாளர்கள். கமலும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியாக பேசி, தப்பு செய்தவர்கள் தலையில் கொட்டு வைப்பார் எனத் தெரிகிறது. இது இன்றைய புரொமோவைப் பார்க்கும் போதே தெரிகிறது.

மாற்றம்:

மாற்றம்:

நிச்சயம் இந்தப் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றிற்கோ அல்லது எல்லாவற்றிற்குமோ கமல் குறும்படம் போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் புரொமோவில், ‘டிவிட்டரில் போடும் பதிவு போலவே குழப்பமாக பேசியுள்ளார்' கமல். அதோடு தனது தோற்றத்திலும் மாற்றத்துடன் வந்துள்ளார்.

மக்கள் எதிர்பார்ப்பு:

மக்கள் எதிர்பார்ப்பு:

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என கமல் மாற்றத்தோடு வந்துள்ளார். நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மனதிலும் அவர் மாற்றத்தைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். எப்போதும் நடுநிலையானவராக பேசும் கமல், இந்த விவகாரங்களை எப்படிக் கையாளுகிறார் என மக்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X