அடுத்த குடியை கெடுக்க கிளம்பிய சினேக்ஷி.. அய்யய்யோ இந்த வாரமும் அதே டிராமாவா.. வீ பாவம் பிக் பாஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரொமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day:43: மீண்டும் Sakshi-யால் தொடர்ந்த பிரச்சனை-வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அபிராமி, முகென், சாக்‌ஷியை வைத்து மீண்டும் ஒரு முக்கோண காதல் கதை காட்டப்படும் எனத் தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டு விட்டார். சாக்ஷி தான் வெளியேற்றப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ரேஷ்மாவின் எவிக்ஷன் குறித்து பலவிதமான கருத்து இணையத்தில் உலா வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக காதல் என்ற பெயரில் கண்டெண்ட் கொடுத்து வருபவர் சாக்‌ஷி தான். இந்த வாரமும் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறாததால், திரும்பவும் காதல் அழுகாச்சி காவியம் தொடரும் எனத் தெரிகிறது.

ஆனால், இந்த வாரம் கவின், லாஸ்லியாவுக்கு பதில், சாக்‌ஷியை முகென், அபிராமிக்கு இடையில் சிக்க வைத்துள்ளனர் போலும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரொமோவைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

அழுகாச்சி அபிராமி:

அழுகாச்சி அபிராமி:

அதில், ‘நான் முகெனுடன் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா?' என அபிராமியிடம் சாக்‌ஷி கேட்கிறார். அதற்கு கோபமாக பதிலளிக்கும் அபிராமி, வேகமாக எழுந்து வீட்டிற்குள் செல்கிறார். பிறகு, லாஸ்லியாவிடம் அழுது புலம்புகிறார். தான் எழுந்து வரும்போது முகென் வரவில்லை என புலம்புகிறார்.

முக்கோண காதல் விளையாட்டு:

முக்கோண காதல் விளையாட்டு:

சாக்ஷியுடன் முகென் உட்கார்ந்திருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார் அபிராமி. கடந்த வாரம் வரை கவின், சாக்ஷி, லாஸ்லியாவை வைத்து முக்கோண காதல் விளையாட்டு விளையாடிய பிக் பாஸ், இந்த வாரம் அபி, முகென், சாக்ஷியை வைத்து முக்கோண காதல் கதை சொல்லப் போகிறார் என தெரிகிறது.

இப்போ முகென்:

இப்போ முகென்:

'ஸ்நேக்ஷி (சாக்ஷி) இரண்டாவது காதல் கதையை ஆரம்பிச்சிட்டா. கவினில் இருந்து இப்போது முகென். உன்னையும் விட்டு வைக்கல' என இந்த புரொமோவைப் பார்த்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாவம் முகென்:

பாவம் முகென்:

'அட கருமமே இந்த வாரம் இதான் கன்டென்டா. பாவம் அந்த முகென். அந்த பையன விட்ருங்க' என ஒருவர் தனது கமெண்ட்டை பதிவிட்டுள்ளார். மீண்டும் ஒரு நாடகமா என சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே நேற்று வெளியான நிகழ்ச்சியின் இறுதியில் அபிராமியிடம் முகென் கோபப்படுவது போலவும், கட்டிலை உடைப்பது போலவும் காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிராமா குயின்:

"அய்யோ வந்த நாள்ல இருந்து இப்ப வரைக்கும் அழுதே காரியத்தை சாதிக்கிறா. இவள் மட்டும் தான் மனுஷி, இவளுக்கு மட்டும் தான் மனசு இருக்கு. ச்சை... இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த டிராமா குயினோட டிராமாவை பார்க்கனுமோ தெரியவில்லையே" என ஒரு ரசிகர் புலம்பி தள்ளியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X