“சாக்கடை... எல்லா பிரச்சினையும் இந்த 3 சகுனிகளால தான்” நெட்டிசன்கள் யாரை வச்சு செய்றாங்கனு புரியுதா?
சென்னை: கவின், சரவணன், சாண்டி தான் பிக் பாஸ் வீட்டின் சகுனிகள் என நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
நேற்று வரை முக்கோண காதல் பிரச்சினையால் தகித்துக்கொண்டிருந்த பிக் பாஸ் வீட்டில், இன்றில் இருந்து வேறுவிதமான பிரச்சினைகள் ஆரம்பித்துள்ளன. சரவணனைப் பற்றி சேரன் விமர்சிக்க, கடுப்பான சரவணன் சேரனை கண்டபடி பேசுகிறார்.
இது ஒருபுறம் இருக்க இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரொமோ வெளியாகியுள்ளது. வீட்டின் அடுத்த வார கேப்டன் பதவிக்கான போட்டி நடக்கிறது. அதில் மதுமிதா, சாண்டி, முகென் ஆகிய மூவர் கலந்துகொள்கின்றனர்.

மது காயம்:
ஒரு பனிக்கட்டி ஸ்கேட்டரை மூவரும் காலில் கட்டிக்கொண்டு நடக்கிறார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக சாண்டி தடுமாறி கீழே விழுகிறார். அப்போது சாண்டியின் முட்டிக்கை மதுமிதாவின் மூக்கில் இடித்து, அவருக்கு காயம் ஏற்படுகிறது. இதனால் பிக் பாஸ் வீட்டில் பதற்றம் பரவுகிறது.

ரசிகர்கள் கருத்து:
இந்த புரொமோவை பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் பார்த்துள்ளனர். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என விஜய் தொலைக்காட்சியின் சமூக வலைதளப்பக்கத்தில் புரொமோ குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரது கருத்துக்கள் மிகவும் காட்டமாகவே இருக்கிறது.

சாக்கடை:
அதில் ஒருவர், "இந்த முறைதான் பிக்பாஸ் வீட்டில் இரு குரூப். காரணம் இந்த கவின், சாண்டி, சரவணன் மூன்று சகுனிகள்தான். அவர் அவர் திறமையை கொண்டு முன்னேறுங்கள் அடுத்தவரை தள்ளிவிட்டு முன்னேற முயற்சி செய்யாதீர்கள் சகுனிகளே", என காட்டமாக தெரிவித்துள்ளார். சிலர் சரவணனை சாக்கடை என திட்டியுள்ளனர்.

பிஜிஎம் வேறயா:
"ப்ப்பா... அவெஞ்சர் டிரெய்லர் பார்த்த மாதிரியே உள்ளது. பிஜிஎம் (பின்னணி இசை) அள்ளுது" என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். "சாண்டி அண்ணா நீங்க வேற லெவல்" என மற்றொருவர் பாராட்டியுள்ளார்.

மதுவின் மைண்ட்வாய்ஸ்:
"சாண்டி - என்னை அன்னைக்கு எப்படி திட்டின. இரு இரு உன் மூக்க உடைச்சுடுறேன். மது - அடபாவி எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே அடியா என் மூக்கை பேத்துட்டியே டா" என கற்பனையான மைண்ட் வாய்சில் பேசுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











