இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. மதுமிதா மூக்கை உடைத்த சாண்டி... ரத்தக் களறியான பிக் பாஸ் வீடு..!

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Sandy Cries out : நான் எந்த பிரச்சனையிலையும் கலந்துக்க மாட்ட

சென்னை : அடுத்த வாரத்துக்கான கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில், நடிகை மதுமிதா காயமடைந்தார்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் வீட்டில் இன்று ஒரேநாளில் ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கும் என்றே தோன்றுகிறது. இன்று காலை வெளியிடப்பட்ட புரொமோவில் இயக்குனர் சேரனை மரியாதைக் குறைவாக பேசுகிறார் நடிகர் சரவணன்.

இந்த புரொமோ வைரலானது. இரண்டாவது புரொமொவிலும் அதே விஷயம் தான் இன்னும் கூடுதலாகக் காட்டப்பட்டது. இதனால் சரவணன் மீது ரசிகர்கள் உச்சபட்ச கோபத்தில் இருக்கிறார்கள்.

3வது புரொமோ

3வது புரொமோ

இந்நிலையில் தற்போது மூன்றாவது புரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அடுத்த வாரத்துக்கான கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெறுகிறது. முகென், சாண்டி, மதுமிதா ஆகியோர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். பனி சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்கேட்டர்களை மூவரும் வரிசையாக காலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

மதுமிதா மூக்கு உடைந்தது

மதுமிதா மூக்கு உடைந்தது

போட்டியில் வெற்றி பெற என்ன யுக்தியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என பிக் பாஸ் அறிவிக்கிறார். சாண்டி மற்றும் முகெனின் ஆக்ரோஷமான சண்டையில் இடையே மாட்டிக்கொண்டு மூக்கில் காயமடைகிறார் மதுமிதா. இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பாகிறது.

பிரச்சினை மேல் பிரச்சினை

பிரச்சினை மேல் பிரச்சினை

ஏற்கனவே சரவணன் - சேரன் பிரச்சினையினால் பிக் பாஸ் வீடு ரணகளமாகியுள்ளது. இந்நிலையில் மதுமிதா மூக்குடைப்பட்டிருப்பது பதற்றத்தை மேலும் கூட்டியுள்ளது. சும்மா முகத்தில் பேஸ்ட்டால் வரைந்ததற்கே நீ எல்லாம் ஒரு ஆம்பளையா என கேட்டு சாண்டியை வறுத்தெடுத்தார் மதுமிதா.

விட்டுக் கொடுப்பார்களா?

விட்டுக் கொடுப்பார்களா?

மதுவிடம் இன்று சாண்டியும், முகெனும் என்னவெல்லாம் பேச்சு வாங்குகிறார்கள் என்பது இரவு தான் தெரியும். இல்லை, இதைக் காரணமாக வைத்து மதுமிதாவுக்கு தலைவர் பதவியை மற்ற இரண்டு போட்டியாளர்களும் விட்டுக் கொடுத்து விடுகிறார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X