வீட்டுக்குப் போகணும் எனக் கதறும் கவின்.. ‘போகாதே..’ என தடுக்கும் பிக் பாஸ்.. என்னதான்யா நடக்குது?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரொமோவும் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: இந்த வாரம் இல்லாவிட்டாலும், அடுத்த வாரமாவது தன்னை எப்படியாவது வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என கவின் கூறுவது போல பிக் பாஸ் சீசன் 3யின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.
நேற்றைய எபிசோட்டைப் போலவே இன்றும், கவின், லாஸ்லியா மற்றும் சாக்ஷி மேட்டரை வைத்தே ஓட்டி விட பிக் பாஸ் முடிவு செய்து விட்டார் போலும். இன்று வெளியான மூன்று புரொமோக்களிலும் அதே அரைத்த மாவு தான். புதிதாக ஒன்றும் இல்லை.
முதல் இரண்டு புரொமோக்களில் இருந்து வேறுபட்டு, இதில் கவின் மட்டுமே பேசுகிறார். 'தன்னை எப்படியும் இந்த வாரம் இல்லையென்றால் அடுத்த வாரம் நாமினேட் செய்து தன்னை வீட்டுக்கு அனுப்பி விடும்படி சொல்கிறார்' கவின். வழக்கம் போலவே திரும்பவும் சாக்ஷி பேச வருகிறார். லாஸ்லியா கோபித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து செல்கிறார்.

சலித்து விட்டது
இதே காட்சிகளை திரும்பத் திரும்ப பார்த்து நமக்கே சலித்து விட்டது. போகிற போக்கை பார்த்தால் இவர்கள் பண்ணும் அலம்பலைப் பார்த்து, சக போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து தெறித்து ஓடப் போகிறார்கள். அந்தளவிற்கு இவர்கள் காதல் மற்றும் நட்பு என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டில் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.
திட்டும் நெட்டிசன்கள்
வழக்கம் போல் நெட்டிசன்களும் கவினையும், சாக்ஷியையும், லாஸ்லியாவையும் திட்டத் தொடங்கி விட்டனர். இந்த டிவீட்டில் சாக்ஷியைத் திட்டியுள்ளார் ஒருவர். சாக்ஷியின் லுக்கைப் பார்த்தால் ஜூலி 100 தடவை மேல் எனக் கூறியிருக்கிறார்.
புல் மேக்கப்பில் சாக்ஷி
அது எப்படி இவ்வளவு சோகத்திலும், புல் மேக்கப்பில் இருக்கிறீர்கள் என சாக்ஷியின் புகைப்படத்தைப் பதிவிட்டு இந்த ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார். சாக்ஷி மட்டுமல்ல, வழக்கத்திற்கு மாறாக லாஸ்லியாவும் நல்ல மேக்கப்போடு தான் இன்று காணப்படுகிறார். நம் மனதில் தோன்றிய கேள்வியை இவர் கேட்டு விட்டார்.
கமல் தான் தீர்த்து வைக்கணும்
கமல் வந்து தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார் இந்த நெட்டிசன். சாக்ஷியிடம் இருந்து கவினைக் கமல் தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார். ஆனால், சொல்ல முடியாது கமல் குறும்படம் போட்டு திடீரென கவினுக்கு எதிராக பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications











