“ச்சீ.. அவமானமா இருக்கு.. அவரை முதல்ல வெளியே அனுப்புங்க..” காட்டமான டிவீட் போட்டு காமெடி பீசான வனிதா

சரவணன் பற்றி வனிதா காட்டமான டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Chithappu Saravanan : பெண்களை தடவியதுக்கு மன்னிப்பு கேட்ட சித்தப்பு- வீடியோ

சென்னை: சரவணன் பற்றி வனிதா போட்ட டிவீட்டிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீடா இல்லை இது வனிதாவின் வீடா என மக்களே குழம்பிப் போகுமளவுக்கு பிக் பாஸ் வீட்டில் அல்லி ராஜ்யம் நடத்தியவர் வனிதா விஜயகுமார். ஆனால், சிலப்பல காரணங்களால் இரண்டாவது போட்டியாளராக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால், அவர் வீட்டில் இருந்தவரை மக்களிடம் இருந்த எதிர்ப்பு அலையை, பிக் பாஸ் கடைசி நாளில் அப்படியே சிம்பதியாக மாற்றி விட்டார். இதனால் மக்களின் அனுதாபத்தைப் பெற்று நல்ல பெயருடன் வெளியேறினார்.

சர்ச்சைப் பேச்சு:

சர்ச்சைப் பேச்சு:

இந்நிலையில், பெண்கள் பற்றி மோசமாகப் பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிக் பாஸ் போட்டியாளரான சரவணன். தான் கல்லூரி செல்லும் வயதில் பேருந்தில் சென்ற போது, பெண்களை உரசியதாக அவர் கூறியதற்கு, கமலும் சிரித்ததால் தான் இப்பிரச்சினையே உண்டானது. இது தொடர்பாக மகளிர் அமைப்புகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

மன்னிப்பு கேட்ட சரவணன்:

மன்னிப்பு கேட்ட சரவணன்:

இதனால் தொலைக்காட்சியே அவரை மன்னிப்பு கேட்ட வைத்தது. சரவணனும் இது போல் இனி யாரும் செய்யக்கூடாது என்பதற்காகவே அதனைக் கூறியதாக விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார். இந்தச் சூழ்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா, இந்த சம்பவம் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா கோபம்:

அதில் அவர், ‘அவமானகரமான விஷயம். சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்க தகுதியே இல்லாதவர். எனவே, மக்கள் அவரை வாக்களித்து உடனடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இந்த வாரம் நாமினேசனில் சரவணன் பேரே இல்லை. இது வனிதாவுக்கு தெரியவில்லை போலும். இதனை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் வனிதாவின் டிவீட்டுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

நெட்டிசன்கள் பதிலடி:

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிலேயே நடுநிலையாளராக விளையாடி வருபவர் சரவணன் தான், தான் நடந்து கொண்டதுபோல் மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டாம் என கூறுவதற்காகவே அவர் அப்படிக் கூறினார். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறீர்களே. நீங்கள் தான் வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டீர்களே. இனி உங்கள் வேலையைப் பாருங்கள்' என வனிதாவிற்கு காட்டமாக அவர்கள் பதிலளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X