“சீக்ரெட் ரூமுக்கு போகிறேன்”... பாவம், கடைசி வரை பிக் பாஸை நம்பி ஏமாந்து போன வனிதா!
பிக் பாஸ் வீட்டில் ரகசிய அறையில் தங்க வைக்கப்படுவோம் என வனிதா நம்பியது வீணாகிவிட்டது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இவ்வளவு சீக்கிரம் வெளியேறுவோம் என வனிதாவே எதிர்பார்க்கவில்லை போலும்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக நேற்று வெளியேறியுள்ளார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே மக்களிடம் அதிகம் வெறுப்பைச் சம்பாதித்தவர் வனிதா தான். காரணம் அவர் போட்டியாளர்களிடம் போட்ட சண்டை தான். பெரும்பாலும் டிஆர்பிக்கு அவர் தான் காரணமாக இருந்தார்.
முதல் இரண்டு வாரங்களாக தலைவர் பதவியைக் காரணம் காட்டி அவர் நாமினேசனில் இருந்து தப்பி வந்தார். போனவாரம் தான் முதன்முறையாக அவரது பெயர் நாமினேட் செய்யப்பட்டது.

கொலைகாரன் டாஸ்க்:
ஆனால், போனவாரம் லக்சரி பட்ஜெட்டுக்காக கொடுக்கப்பட்ட கொலைகாரன் டாஸ்க்கில் வனிதா சாமர்த்தியமாக பிக் பாஸ் கொடுத்த கொலைகள் அனைத்தையும் திறமையாக செய்து முடித்தார். இதனால் இந்த டாஸ்க்கில் திறமையாக விளையாடிய போட்டியாளர் என்ற பெருமையும் வனிதாவிற்கு கிடைத்தது.

ஏமாற்றம்:
அதனால் எப்படியும் இம்யூனிட்டி தந்து பிக் பாஸ் இந்த வாரம் தன்னைக் காப்பாற்றுவார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. இந்த ஏமாற்றத்தை அவரே கமலுடன் தோன்றிய போது மேடையில் வெளிப்படுத்தினார். அதோடு, தனது வாய்க்காகவாவது பிக் பாஸ் தன்னை கடைசி வரை வீட்டில் வைத்திருப்பார் என அவர் எதிர்பார்த்தார்.

சீக்ரெட் ரூம்:
ஆனால், அவரது வாயே அவருக்கு வினையாகி விட்டது. அவர் எவிக்ட் செய்யப்படுகிறார் என கமல் அறிவித்த போது கூட, அதிர்ச்சி அடைந்த வனிதா, ‘சக போட்டியாளர்களிடம் பிக் பாஸ் ஏமாற்றுகிறார். நிச்சயம் சீக்ரெட் ரூமுக்குத் தான் அனுப்புவார்கள்' எனத் தெரிவித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி அதுவும் நடக்கவில்லை. கமல் அவரை வீட்டுக்கே அனுப்பி விட்டார்.

நம்பிக்கை:
மேடையில் தோன்றியபோது கூட, அவர் தான் நேர்மையாக விளையாடியதாகவே வாதாடினார். மேலும், தனக்கு வாக்களிக்க விஜய் டிவி அளித்த நம்பர் தவறாக இருக்குமோ என தான் சந்தேகித்தார். பிக் பாஸ் பட்டம் வனிதாவின் நோக்கமில்லை என்பது ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தது. எப்படியும் பிக் பாஸ் வீட்டில் இன்னும் சில வாரங்கள் தாக்குப்பிடித்து விடலாம் என அவர் கருதினார். ஆனால் அவரது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பிக் பாஸ் தவிடு பொடியாக்கி விட்டார்.


Click it and Unblock the Notifications











