மீண்டும் வனிதா.. செம டிவிஸ்ட் கொடுத்த பிக் பாஸ்.. நடந்து வரும்போதே அக்கா அலற வைக்குறாங்களே!
பிக் பாஸ் வீட்டிற்கு வனிதா மீண்டும் விருந்தினராக வந்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் போட்டியாளரான வனிதா வந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3யில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் வனிதா. இது பிக் பாஸ் வீடா அல்லது வனிதாவின் வீடா என மக்களே குழம்பிப் போகும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருந்தன. வீட்டில் எப்போதும் அவரது சத்தம் தான் ஓங்கி இருந்தது.
அதோடு, மகளைக் கடத்தியதாக இரண்டாவது கணவர் புகார் அளித்த விவகாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று வனிதாவைப் போலீசார் விசாரித்தனர். இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டது.

வனிதா வெளியேற்றம்:
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அதிரடியாக இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் வனிதா. மூன்றாவது வாரமே அவர் வெளியேறியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதுவரை வனிதாவை திட்டியவர்கள்கூட, அவரது வெளியேற்றத்தால் பிக் பாஸ் வீடு களையிழந்து விட்டதாகக் கவலைப்பட்டனர்.

கஸ்தூரி:
மீண்டும் அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். வனிதாவின் இடத்தை மீரா நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் நான்காவது போட்டியாளராக பிக் பாஸில் இருந்து வெளியேறினார். தற்போது கஸ்தூரி 17வது போட்டியாளராக வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் வனிதாவின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹோட்டல் டாஸ்க்:
இந்நிலையில், போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார் வனிதா. இன்றைய முதல் புரொமோவில் அந்தக் காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளது. இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது போல. போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்கள் உடையில் உள்ளனர்.

சிறப்பு விருந்தினராக வனிதா:
அப்போது சிறப்பு விருந்தினராக உள்ளே வருகிறார் வனிதா. வைல்ட் கார்ட் என்ட்ரி போல நடனக் கலைஞர்களுடன் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே வந்திருக்கிறார். அக்கா வரும் போதே, ஏதோ பெரிய கண்டண்ட் காத்திருக்கு என்பது நன்றாகத் தெரிகிறது. வீட்டுக்குள் இருந்தவரை மற்ற போட்டியாளர்களிடம் அதிகம் புறணி பேசியவர் வனிதா.

தரமான சம்பவங்கள்:
வெளியில் சென்ற பிறகு நிச்சயம் தான் கலந்து கொண்ட எபிசோட்களை இணையத்தில் பார்த்திருப்பார். எனவே, தன்னைப் பற்றி யார் யாரெல்லாம் பின்னாடி பேசினார்கள் என்பது அவருக்கு தெரிந்திருக்கும். நிச்சயம் இம்முறை அவர்களுக்கு வனிதா பதிலடி கொடுப்பார் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











