"லாஸ்லியா மிஷன்.. ஒர்த்தே இல்ல” ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா.. கஸ்தூரி, கவினுக்கு கிழி.. கிழி.. கிழி..!

பிக் பாஸ் வீட்டில் தனது அதிரடி ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டார் வனிதா.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2:Day 50: Kavin-னை திட்டிய Vanitha- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் வனிதா. சகபோட்டியாளர்களை அவர் கேள்விகளால் வறுத்தெடுத்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 3ல் முக்கிய போட்டியாளராக களமிறங்கியவர் வனிதா விஜயகுமார். காரணம் அதற்கு முன்னரே அவர் ஒரு சண்டைக்கோழி என்பது தமிழக மக்கள் அறிந்தது தான். எனவே நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் கச்சேரி களை கட்டும் என எதிர்பார்க்கப் பட்டது.

மக்களின் நம்பிக்கையை வீணாக்காமல் வனிதாவும் பிக் பாஸ் வீட்டில் ஏதாவது கண்டெண்ட் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

சிறப்பு விருந்தினர்:

சிறப்பு விருந்தினர்:

ஆனால், அவரது சொந்தப் பிரச்சினைகள் காரணமாக மூன்றாவது வாரமே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார் வனிதா. அவர் பிக் பாஸ் வீட்டில் எத்தனை நாட்கள் இருப்பார் எனத் தெரியவில்லை.

புதிய கண்ணோட்டம்:

புதிய கண்ணோட்டம்:

ஆனால், வெளியில் சென்று சக போட்டியாளர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை வீடியோவில் பார்த்ததால், தற்போது அவருக்கு நிகழ்ச்சி பற்றிய புரிதல் வேறுமாதிரி கிடைத்திருக்கும். எனவே புதிய கண்ணோட்டத்துடன் தற்போது பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்வார் எனத் தெரிகிறது.

விருப்பம்

விருப்பம்

வெளியுலகத் தொடர்பே இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் வாழ்ந்து வரும் போட்டியாளர்கள், வெளியில் இருந்து உள்ளே யார் வந்தாலும் தங்களுக்கு வெளியே எப்படி ஆதரவு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவே விரும்புகின்றனர். கடந்த சீசன்களிலும் இது நாம் கண்கூடாகக் கண்ட உண்மை தான்.

காதல் கன்டெண்ட்:

காதல் கன்டெண்ட்:

அந்தவகையில் பிக் பாஸ் வீட்டிற்கு புதிய விருந்தினராக வந்துள்ள வனிதாவும், தற்போது தனது அனுபவங்களை சக போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்வது போல் இரண்டாவது புரொமோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில், காதல், கத்தரிக்காய் கண்டெண்ட் எல்லாம் ஒர்த்தே இல்லை என அவர் அறிவுரை கூறுகிறார்.

கஸ்தூரிக்கு கண்டனம்:

கஸ்தூரிக்கு கண்டனம்:

அதோடு, கஸ்தூரியோடு சேர்ந்து லாஸ்லியா மிஷன் என்ற பெயரில் லாஸ்லியா யார் எனத் தெரிந்து கொள்ளப் போவதாக அவர் கூறுகிறார். தர்ஷனையும், ஷெரீனையும் மாலை மாற்றிக் கொள்ளச் சொன்ன விவகாரத்தில் கஸ்தூரியின் நடவடிக்கை குறித்து தனது அதிருப்தியை வனிதா வெளிப்படுத்தியுள்ளார்.

டிஆர்பி எகிறும்:

இப்படியாக இந்த புரொமோவில் கவின், கஸ்தூரி, லாஸ்லியா என எல்லோரையும் கேள்விகளால் வறுத்தெடுக்கிறார். நிச்சயம் நிகழ்ச்சியில் கிழி கிழியென வெளுத்து வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் வனிதா கையில் சாட்டையுடன் வந்திருப்பதால், இன்றைய டிஆர்பி நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X