இந்த மொக்க புரொமோ போடுறதுக்கா இவ்ளோ நேரம் பிக் பாஸ்? செம கடுப்பில் ரசிகர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரொமோவில் சுவாரஸ்யமே இல்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் சீசன் 3ன் இன்றைய முதல் புரொமோ வெளியாகியுள்ளது. ஆனால், அது பரபரப்பாக இல்லாததால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் முழுவதும் போட்டியாளர்கள் பண்ணும் அட்ராசிட்டிகளுக்கு சனி, ஞாயிறுகளில் கமல் வந்து சரியான குட்டு கொடுப்பார். அன்றைய தினம் தான் கமல் குறும்படம் போட்டு, பலரது முகமூடிகளையும் கழட்டுவார். இதனாலேயே வார இறுதி எபிசோட்களை மக்கள் ஆர்வமாக பார்ப்பதுண்டு.

அன்றன்று நிகழ்ச்சியில் என்ன ஒளிபரப்பாகும் என்பதை முன்கூட்டியே புரொமோவில் காட்டி விடுகிறார்கள் என்பதால், தினமும் புரொமோவையும் மக்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். அந்தவகையில் இன்றைய தினத்திற்கான முதல் பிக் பாஸ் புரொமோ வெளியாகியுள்ளது.
எப்போதுமே காலையில் முதல் புரொமோ வெளியாகும். பிறகு மாலைக்குள் அடுத்த இரண்டு புரொமோக்கள் வெளியாவது வழக்கம். ஆனால், இன்று மதியத்தில் தான் முதல் புரொமோவே வெளியிட்டுள்ளனர். அதுவும் போட்டியாளர்களைக் காட்டாமல் கமல் பேசுவதாகவே இருக்கிறது.
இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த வாரம் பல பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அதைப் பற்றி எதையும் பேசாமல், போட்டியாளர்களைக் காட்டாமல் இந்த புரொமோ இருப்பது அவர்களை சலிப்படைய வைத்துள்ளது. அதிலும் கமல் அரசியல் பேசுவது நெட்டிசன்களை இன்னும் கோபப்பட வைத்துள்ளது.

'இந்த மொக்க புரொமோவைப் போடத்தான் இவ்ளோ லேட்டா?' என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சாக்ஷி பிரச்சினை பற்றி மீரா பேசியது தொடர்பாக குறும்படம் போடுவீர்களா கமல் சார் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, வாராவாரம் அசத்தலான உடைகளில் வந்து அசத்தி வருகிறார் கமல். சினிமாவை விட பிக் பாஸில் அவரது உடையலங்காரம் அழகாக இருக்கிறது. வழக்கம் போல, இன்றைய எபிசோட்டிலும் அவர் சூப்பராக ஆடை அணிந்துள்ளார். எனவே, 'கமல் சார் உங்க டிரஸ் சூப்பர், அசத்தல்' என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











