Bigg boss 3 tamil: சாக்ஷிக்கு என்னதான் பிரச்சனை? கவினை மறக்க முடியலையா?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 36 : Promo 2 : Sakshi BackStabs kavin : சாக்ஷியின் நம்பிக்கை துரோகம்-வீடியோ

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹவுஸ் மேட் மீரா வெளியேறிய பின்னர் கொஞ்சம் குறைந்திருந்த சுவாரஸ்யம், நேற்று ஓபன் நாமினேட் செய்யப்பட்டதில் இருந்து சூடு பிடிக்க துவங்கி உள்ளது.

ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்காத குறை, கடிச்சுக்காத குறை.என்றாலும், ஏனோ தெரியவில்லை, மீரா வெளியேறியதை பற்றி சேரன், மதுமிதா, ரேஷ்மா தவிர வேறு யாரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.

கவினுடன் ஹவுஸ் மேட்ஸில் எந்த பெண்கள் பேசினாலும், உடனடியாக அவங்களை கடிச்சு குதறாத குறையாக போயி, என்ன பேசுனீங்கன்னு கேட்டுட்டு வந்துடறார்.

குறுகுறுன்னு ஸாக்ஷி பார்வை

குறுகுறுன்னு ஸாக்ஷி பார்வை

எப்போதும் குறுகுறுன்னு பார்த்துகிட்டே வீட்டை, வளைய வரும் ஷாக்ஷி, யார் என்ன பேசுகிறார்கள் என்பதை விட, யார் கவினுடன் என்பதை விட, எந்த பெண் ஹவுஸ் மேட்ஸ் கவினுடன் பேசுகிறார்கள் என்பதையே எப்போதும் கவனித்து வருகிறார். இப்படித்தான் லாஸ்லியாவை கண்காணித்து அவர், இப்போது சாக்ஷியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

ரேஷ்மாவிடம் நேற்று

ரேஷ்மாவிடம் நேற்று

நேற்று ஓபன் நாமினேஷனில் ரேஷ்மா கவினை நாமினேட் செய்துவிட்டு, அவரின் கையைப் பிடித்துக்கொண்டு, கவினின் தோளில் சாய்ந்து தான் நாமினேட் செய்ததற்கு சாரி கேட்டார். பின்னர் நீ வெளியில போயிட்டீன்னா என்னோட பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டிட்டு... மறுபடியும் சாரின்னு சொன்னார். இதை கவனிக்காதது போலவே கவனித்து சென்றுவிட்ட சாக்ஷிக்கு ரேஷ்மா கவினுடன் என்ன பேசுனாங்கன்னு தெரிஞ்சுக்கற வரைக்கும் நிலை கொள்ளலை.

ரேஷ்மா சாக்ஷி

ரேஷ்மா சாக்ஷி

ஒரு வழியா கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து காபி சாப்பிட்டு கொண்டு இருந்த ரேஷ்மாவிடம், நீயும் கவினும் ராசி ஆகிட்டீங்களா? பின்னே அவன் கையைப் பிடிச்சு எல்லாம் பேசிகிட்டு இருந்தியேன்னு கேட்கறாங்க. ராசியாக ஆகலை.. நான் அவனை நாமினேட் செய்தேன். அதுக்கு சாரி கேட்டேன், அவ்ளோதான்னு சொல்றாங்க. அப்போதும் நம்பாத ஷாக்ஷி.இல்லே கை எல்லாம் பிடிச்சு பேசிகிட்டு இருந்தியேன்னு கேட்கறாங்க.

சேரன் மாட்டினார்

சேரன் மாட்டினார்

வெளியில் சுத்தம் செய்துகொண்டு இருந்த சேரனிடம், லாஸ்லியாவுக்கு என்கிட்டே என்ன பிரச்சனை அண்ணா..நான் பேசி, தீர்வு காணலாம்னு போனா, அவ விலகிப் போறான்னு கேட்கறாங்க. அவர் தெளிவா சொல்லிட்டார். அன்னிக்கு கமல் சார் உங்களுக்குள்ள இருந்த பிரச்சனையைத் தீர்த்து வச்சுட்டார். அதுக்கு மேல யாரும் தலையிட வேணாம்னு விட்டாச்சு. நீ மறுபடியும் கவின் கிட்ட பேசிகிட்டு இருந்தே...நான் வார்னிங் பண்ணினேன்..நீ உன்னை மாத்திக்கலை . சரி பர்சனல் விஷயம்னு தலையிடாம விட்டுட்டேன்.

ஹர்ட் ஆகறதுக்கு

ஹர்ட் ஆகறதுக்கு

இதே மாதிரிதான் லாஸ்லியா கிட்டயும், கவின் அவகிட்ட என்ன சொன்னான் ,இவ அவன்கிட்ட என்ன பேசினான்னு எனக்கு தெரியாது. அவளும் உன்னை மாதிரி இப்படி வந்து பேசினா எனக்கு விஷயம் தெரியும். அதுக்கு மேலான பர்சனல் விஷயத்துல என்னால தலையிட முடியாது. ஏற்கனவே நானும் எச்சரிச்சுட்டேன். அவ ஒண்ணும் குழந்தை இல்லேன்னு சொல்லிட்டார்..

நீ அவன்கிட்ட ஹர்ட் ஆகறதுக்கு அடிக்கடி சான்ஸ் குடுக்கறேன்னு நானும் இவகிட்ட சொல்லிட்டேன். இவ கேட்கற மாதிரி தெரியலை. நானும் அதுக்கு மேல தலையிட வேணாம்னு விட்டுட்டேன்னு ஷெரீன் சொல்றாங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X