வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்பவர் நடிகையில்லையாம்.. அரசியல்வாதி.. திருநங்கை..!

தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் மூலம் திருநங்கை தமன்னா செல்வதாக கூறப்படுகிறது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Alya Manasa Entry : பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் செம்பா- வீடியோ

ஹைதராபாத்: பிக் பாஸ் சீசன் 3 தெலுங்கில் வைல்ட் கார்ட் மூலம் திருநங்கை தமன்னா செல்ல இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழில் பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகத் தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகி விட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். நேற்று நான்காவது போட்டியாளராக மீரா மிதுன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

தற்போது வீட்டில் பன்னிரண்டு போட்டியாளர்கள் தான் உள்ளனர். எனவே, இந்த வாரம் புதிய போட்டியாளர் ஒருவர் வைல்ட் கார்ட் மூலம் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்யா மானஸா:

ஆல்யா மானஸா:

அந்தப் போட்டியாளர் ராஜாராணி சீரியலில் நடித்த ஆல்யா மானசா தான் என முதலில் கூறப்பட்டது. இந்தத் தகவலுக்கு ஆல்யா மறுப்பேதும் கூறவில்லை. அதற்குத் தகுந்தாற்போல், அவசர அவசரமாக ராஜாராணி சீரியலும் முடித்து வைக்கப்பட்டது. இதனால் அவர் தான் பிக் பாஸ் வீட்டின் 17வது போட்டியாளர்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஸ்ரீரெட்டி:

ஸ்ரீரெட்டி:

இதற்கிடையில் நடிகை கயல் ஆனந்தி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதாக ஒரு தகவல் வெளியானது. இதுவும் எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. இவர் மட்டுமின்றி, ஸ்ரீரெட்டி, பவர்ஸ்டார் சீனிவாசன், விசித்ரா, சங்கீதா எனப் பலரது பெயர் இந்தப் பட்டியலில் உள்ளது. நிஜமாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளர் செல்லும் வரை இன்னும் பலரது பெயர் இணையத்தில் உலா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு பிக் பாஸ்:

தெலுங்கு பிக் பாஸ்:

இது ஒருபுறம் இருக்க, தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது. நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்‌ஷன் எதுவும் இல்லை. ஆனால் தமிழைப் போலவே வைல்ட் கார்ட் மூலம் புதிய போட்டியாளர் ஒருவர் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநங்கை தமன்னா:

திருநங்கை தமன்னா:

அந்தப் போட்டியாளர் திருநங்கை தமன்னா தான் என ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. பிரபல நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகையான இவர், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மங்களகிரி தொகுதியில் போட்டியிட்டார். பிக்பாஸில் இவர் கலந்துகொள்ள சிபாரிசு செய்தது சீசன் 2 போட்டியாளர் நுதன் நாயுடு தான் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: bigg boss wildcard
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X