Bigg Boss 3 சந்து கேப்பில் மதுவுக்கு முத்தம் கொடுக்க வர்ற சித்தப்பு?: வாயிலேயே அடிக்கணும்

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 31 : Promo 1 : மீராவை திட்டிய மது, பத்தி எரியும் வீடு - வீடியோ

சென்னை: இன்றைய பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் சித்தப்பு லேசுப்பட்ட ஆள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் 3 வீட்டில் உள்ள போட்டியாளர்களை இரண்டு கிராமமாக பிரித்து ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார்கள். டாஸ்க் குறித்த ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் வாவ், டாஸ்க் என்றால் இது தான் டாஸ்க் என்று டயலாக் விட்டார்கள். ஆனால் நிகழ்ச்சியை பார்த்தபோது மறுபடியும் கவுத்திட்டியே பிக் பாஸ் என்று நொந்துவிட்டனர்.

ஆமாம், இந்த கிராமத்து டாஸ்கும் கொடூர மொக்கையாக உள்ளது.

தர்ஷன்

நம்ம புள்ள தர்ஷனுக்கு சண்டக்கோழி மீரா மிதுன் அம்மாவாம், பெரியக்கா ஷெரின் மனைவியாம். யோவ் பிக் பாஸ் உங்க செலக்ஷன்ல தீயை வைக்க என்று தர்ஷன் ஆர்மி திட்டிக் கொண்டிருக்கிறது. தர்ஷனுக்கு ஏற்ற ஜோடி என்றால் இனி யாராவது புது ஆளை தான் அழைத்து வர வேண்டும் ஆர்மிக்காரர்களே.

மதுமிதா

கிராமத்து டாஸ்க் குறித்து இன்று வெளியாகிய வீடியோவில் மீரா மிதுனை அடக்க நாட்டாமை மதுமிதா செமயாக பேசுகிறார். மதுவுக்கு ஒரு முத்தம் கொடுத்தால் ஆப்பிள் சாப்பிடலாமாம். நல்லா இருக்கே இந்த மேட்டர் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். மதுவின் கன்னத்தில் அபிராமி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஆப்பிள் சாப்பிட செல்ல அடுத்ததாக நானும் என்று உம்மா கொடுக்க வருகிறார் சித்தப்பு சரவணன். ஏன் சித்தப்பு, நமக்கு இந்த வயதில் இந்த வேலை எல்லாம் தேவையா?. நைனா மோகன் வைத்யா கிளம்பிய பிறகு சித்தப்பு அவர் இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார் போன்று.

முத்தம்

முத்தம்

நைனா பெண் போட்டியாளர்களை ஓடியோடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததை பார்த்து பார்வையாளர்கள் கலாய்த்தனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நான் என்ன அப்படியா பண்ணினேன் என்று அப்பாவி போன்று கேட்டு கண்ணில் தண்ணி வச்சுண்டார் நைனா. அப்படித் தான் பண்ணீங்க நைனா என்று அவரின் லீலைகளை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடி

அடி

நைனா ஒன்டிக்கட்டை வீட்டுக்கு போனாலும் அடி விழாது. சித்தப்பு, நீங்க இரண்டு பொண்டாட்டிக்காரர், வீட்டிற்கு சென்றால் செமத்தியாக அடி விழும் என்று பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர். அட விடுங்கப்பா, நைனா நிறைய முத்தம் வாங்கி, முத்தம் கொடுத்ததை பார்த்து சித்தப்பு நாமும் முயற்சி செய்யலாம் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ. வேண்டாம் சித்தப்பு உலக நாயகன் வந்து குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திவிடுவார். நாம் வழக்கம் போன்று மிக்சர் சாப்பிட்டோமா கமல் முன்பு சக போட்டியாளர்களை அசிங்கப்படுத்தினோமா என்று மட்டும் இருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X