twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று டார்கெட் லாஸ்லியா தான்: கமலிடம் மீண்டும் நோஸ்கட்

    By Siva
    |

    சென்னை: இன்று வெளியான 3 பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்களிலும் லாஸ்லியா விவகாரம் தான்.

    பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கும், கவினுக்கும் இடையே காதல் என்பது அனைவருக்கும் தெரியும். வீட்டை விட்டு வெளியே கிளம்பிய பிறகு இந்த காதல் நீடிக்காது என்று தான் பலரும் நினைக்கிறார்கள்.

    இந்த காதல் கதையை வைத்து பல வாரங்களை ஓட்டிக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.

    கமல்

    இன்று வெளியான முதல் ப்ரொமோ வீடியோவில் கமல் லாஸ்லியாவை பார்த்து ரைட்டா, தப்பா விளையாட இது பாண்டி இல்ல என்று தெரிவித்துள்ளார். சேரன் அப்பா என்ன சொல்வார், தர்ஷன் அண்ணன் என்ன சொல்வார், கவின் தம்பி என்ன சொல்வார், நான் என் தம்பியை சொன்னேன் என்று கமல் லாஸ்லியாவை கலாய்த்துள்ளார். சஞ்சலமாக உள்ளது யார் கையையாவது பிடிக்க வேண்டும் என்றால் என் போன்று செய்யுங்கள் என்று தன் ஒரு கை மீது மற்றொரு கையை வைத்தார் கமல். அவர் அறிவுரை வழங்கியதும் லாஸ்லியா அப்படியே கவினை விட்டுவிடுவது போன்று தான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

    காதல்

    காதல்

    கவின் விவகாரத்தால் லாஸ்லியா கமலிடம் அசிங்கப்படுவது இது முதல் முறை அல்ல. எத்தனை முறை அசிங்கப்பட்டாலும் கவினுடன் தான் இருக்கிறார். கவினுக்கு வெளியே காதலி இருப்பது தெரிந்தும் லாஸ்லியா அவரிடம் இப்படி பழகுவதால் தான் பலரும் அந்த பெண்ணின் கேரக்டரை பற்றி தவறாக பேசுகிறார்கள்.

    பார்வையாளர்கள்

    பார்வையாளர்கள்

    கவின், லாஸ்லியா காதல் கதையை மீண்டும் மீண்டும் காட்டி பார்வையாளர்களை கதறவிட வேண்டாம் என்று கமல் சார் பிக் பாஸுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர் சொன்னால் மட்டும் பிக் பாஸ் காதல் டிராக்கை கட் செய்துவிடுவாரா என்ன?. அட போங்கப்பா.

    தர்ஷன்

    3வது ப்ரொமோ வீடியோவில் சேரன் லாஸ்லியா பற்றி தர்ஷனிடம் பேசுகிறார். எப்பொழுது கவினுடன் சேர்ந்து பேச ஆரம்பித்தாரோ அதில் இருந்து விலகிவிட்டார் லாஸ்லியா என்கிறார் சேரன். நாடு விட்டு நாடு வந்து இந்த கவினுடன் சேர்ந்து ஆட்டம் போடுவதால் லாஸ்லியாவின் பெயர் கெட்டுப் போனது தான் மிச்சம். பாவம் அந்த புள்ள.

    English summary
    Three promo videos of Bigg Boss 3 released today are about Losliya. Looks like host Kamal Haasan is going to blast her tonight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X