அடேங்கப்பா இது நம்ம லிஸ்டுலயே இல்லையே: வெளியேறினார் சண்டக்கோழி
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு முதல் ஆளாக வந்த பாத்திமா பாபு முதல் ஆளாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சீனியரான மோகன் வைத்யா தான் இன்று வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் நினைத்தார்கள்.
பிக் பாஸ் பெரிய டுவிஸ்ட் வைத்து யாருமே எதிர்பார்க்காத ஆளை வெளியேற்றிவிட்டார்.

வனிதா விஜயகுமார்
மோகன் வைத்யா அல்ல மாறாக வனிதா விஜயகுமார் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆந்திரா போலீஸ் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்திய நிலையில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். வனிதாவை கடைசி வரை வைத்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள் என்று நம்பப்பட்ட நிலையில் பிக் பாஸ் இப்படி செய்துவிட்டார்.
கோபம்
நம்பினால் நம்புங்க நம்பாட்டி போங்க வனிதாவுக்கும் ட்விட்டரில் ஆர்மி உள்ளது. அந்த ஆர்மிக்கு வனிதா வெளியேற்றப்பட்டது குறித்து அறிந்து கோபமாம். எங்கள் தலைவி இல்லாமல் இனி எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள் என்று பார்க்கத் தானே போகிறோம் என்கிறது வனிதா ஆர்மி.

நிம்மதி
வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதால் சக போட்டியாளர்களுக்கு இனி நிம்மதி தான். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இனி சண்டை போட யாருமே இருக்க மாட்டார்களே. ஒரு வேளை மீரா மிதுனை அடுத்த வனிதாவாக மாற்றி சண்டை போட வைப்பார்களோ என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
போர்
வனிதா இருந்த போது அவர் செய்த சேட்டைகளை எல்லாம் பார்த்து அவரை கெட்ட, கெட்ட வார்த்தைகளால் பார்வையாளர்கள் திட்டினார்கள். தற்போது அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தெரிந்ததுமே அய்யோ வனிதா இல்லாமல் இனி போர் அடிக்குமே என்கிறார்கள். ஏதாவது ஒரு முடிவுக்கு சீக்கிரம் வாங்கப்பா.
வயதாகிவிட்டது
மோகன் வைத்யாவுக்கு வயதாகிவிட்டது. அவரால் ஒரு டாஸ்கும் செய்ய முடியாது. அவரை ஏன்யா பிக் பாஸ் காப்பாற்றினீர் என்று கேட்கிறார்கள் பார்வையாளர்கள். வனிதாவது ஏதாவது சண்டை போட்டு என்டர்டெய்ன் பண்ணும், மோகன் வைத்யா ஒன்னும் செய்ய மாட்டாரே என்று விமர்சனம் எழுந்துள்ளது. மோகன் வைத்யாவுக்கு பிக் பாஸை தவிர வேறு யாரும் ஓட்டு போட்டிருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது அவர் எப்படி காப்பாற்றப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











