பிக் பாஸ் வீட்டுக்கு போலீஸ் வந்தது ஏன்?: ப்ரொமோ வீடியோவில் வனிதா விளக்கம்
சென்னை: வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிக் பாஸ் ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை நடத்த தெலுங்கானா போலீசார் நேற்று வந்தது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அந்த பிரச்சனையையே பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவில் காட்டியுள்ளனர்.
முக்கியமாக வனிதாவை பாவம் போன்று காட்டி சிம்பதி கிரியேட் பண்ண முயற்சி செய்துள்ளனர்.
வனிதா
வனிதா தனது சொந்த பிரச்சனை குறித்து ரேஷ்மாவிடம் தெரிவிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. கேஸை க்ளோஸ் பண்ண வேண்டும் அதனால் தான் நான் தெலுங்கானாவில் இருந்து கிளம்பி வந்தேன் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னிடம் தெரிவித்ததாக கூறுகிறார் வனிதா. அதற்கு தாய்மையின் அன்பை வெளிக்காட்ட முடியாத போராட்டம் என்று வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்கள்.

விஜய் சேதுபதி
ஷெரின், சாக்ஷி பேசிய ப்ரொமோ வீடியோவை பார்த்து ஒன்றுமே புரியவில்லை என்று தெரிவித்த நெட்டிசன்கள் வனிதா வீடியோவை பார்த்து பிக் பாஸ் இதற்கு பெயர் என்ன தெரியுமா எச்ச என்று விஜய் சேதுபதி ஸ்டைலில் தெரிவித்துள்ளனர்.
மீம்ஸ்
பிக் பாஸ் ரொம்ப ஃபீல் பண்ணி ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டு வனிதா மீது சிம்பதி கிரியேட் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் இந்த மீம்ஸ் கிரியேட்டர்களோ காமெடி பண்ணிவிட்டார்கள்.
பிக் பாஸ் வீடு
தம்பி துரைசிங்கம்... உன்ன ஸ்பெஷல் ஆபீஸராக பிக்பாஸ் வீட்டுக்கு விடுறன். போய் என் பொண்ண என்கவுண்டர் பண்ணிடு. 😂🙊👇
#BiggBoss
#BiggBossTamil
#BiggBossTamil3
#பிக்பாஸ்
#பிக்பாஸ்3 என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











