சந்து கேப்பில் பெண் போட்டியாளர் இடுப்பில் கை வைத்த மோகன் வைத்யா: என்ன இது கமல் சார்?

By Siva

சென்னை: அப்பா போன்று என்று கூறி இந்த மோகன் வைத்யா செய்யும் சேட்டைகளுக்கு ஒரு அளவே இல்லை என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் இளசுகளை கூட நம்பிவிடலாம் ஆனால் இந்த பெருசு மோகன் வைத்யாவை நம்பவே முடியாது என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மோகன் வைத்யா பற்றி அப்படி கூற காரணம் இல்லாமல் இல்லை.

மோகன் வைத்யா

மோகன் வைத்யா இப்படி சந்து கேப்பில் பெண் போட்டியாளரின் இடுப்பில் கை வைப்பதை எல்லாம் கமல் ஹாஸன் தட்டிக் கேட்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் வயதை கருத்தில் கொண்டு பெண் போட்டியாளர்களும் அவர் என்ன செய்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதை பார்க்கும் பார்வையாளர்கள் தான் முகம் சுளித்து மோகன் வைத்யாவை திட்டுகிறார்கள்.

முத்தம்

முத்தம்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது, கேட்டு முத்தம் வாங்குவது என்று மோகன் வைத்யா வேறு வழியில் சென்று கொண்டிருக்கிறார். அப்பா என்றால் அதற்காக இப்படி அடிக்கடி முத்தம் கொடுப்பது எல்லாம் தேவையா. ரொம்ப சில்றத்தனமாக உள்ளது மோகன் வைத்யா என்று பார்வையாளர்கள் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

குரு

மோகன் வைத்யா மகத் போன்று நடந்து கொண்டிருக்கிறார். வயசு பசங்களை கூட நம்பலாம் இவரை நம்பக் கூடாது என்கிறார்கள் பார்வையாளர்கள். அவர்கள் சொல்வதும் சரி தானே. எந்த வீட்டில் அப்பா இப்படி நடந்து கொள்கிறாராம். எனக்கு யாருமே இல்லை என்று அழுதுவிட்டு இப்படி யாராவது பாசம் காட்டினால் அதை தவறாக பயன்படுத்திக் கொள்கிறாரே என்று விமர்சனம் எழுந்துள்ளது.

பெருசு

பெருசு

இன்று இரவு மோகன் வைத்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் பிக் பாஸ். அய்யோ வெளியேற்றினாலும் பேட்டி மேல் பேட்டி கொடுத்து சாகட்டிப்பாரே என்கிறார்கள் பார்வையாளர்கள். மோகன் வைத்யாவுடன் சேர்த்து சித்தப்பு சரவணனையும் அனுப்பிவிடுங்கள். அவர் எதற்காக பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் என்றே தெரியவில்லை என்று பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X