கமலையே கேள்வி கேட்ட மதுமிதா: சபாஷ்மா என்று பாராட்டும் பார்வையாளர்கள்

By Siva

சென்னை: கமல் ஹாஸனையே கேள்வி கேட்ட மதுமிதாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் வந்து குவிகின்றன.

பாம்புப்பட்டி, கீரிப்பட்டி டாஸ்கின்போது மதுமிதா சரவெடியாய் வெடித்தார். இதை பார்த்த கமல் ஹாஸன் அவர் கோபப்பட்டதையும், சக போட்டியாளர்கள் அவரை சாந்தப்படுத்துகிறேன் என்று அவர்களும் கொந்தளித்ததையும் அழகாக செய்து காட்டினார்.

கமல் நடித்துக் காட்டியதை பார்த்து சாண்டி துள்ளிக் குதித்தார் ஆனால் மதுமிதாவுக்கு முகமே மாறிவிட்டது. என்னடா கமல் இப்படி பண்ணுகிறாரே என்பது போன்று இருந்தது அவரின் முகம்.

சாண்டி

சாண்டி

சாண்டி செய்வது அனைவருக்கும் கஷ்டமாக இரு்தாலும் காமெடியாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவருக்கு டக்கு டக்கென்று முகம் மாறுவதை பார்த்தேன். எனக்கு உடம்பு சரியில்லை என்றுள்ள போதிலும் ஹெவி மூவ்மென்ட் போடு போடு என்று மாஸ்டர் கூறியதால் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. நான் அழும்போது மாஸ்டர் கிண்டல் செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார் மது. அதற்கு சாண்டியோ மதுவின் உடல்நலம் குறித்து மறந்துவிட்டதாக கூலாக தெரிவித்தார்.

கிண்டல்

கிண்டல்

நான் அழும்போது சாண்டி மாஸ்டர் கிண்டல் செய்தது கஷ்டமாக இருந்தது என்றார் மதுமிதா. அதற்கு கமல் சிரித்துக் கொண்டே, அது சாண்டியோட குணாதிசயம் என்றார். மேலும் சாண்டியை ஹெவியாக ஒரு மூவ்மென்ட் போடச் சொல்ல அவரும் பயங்கரமாக ஆடினார். அந்த காட்சியை பார்த்தபோது வேலாயுதம் படத்தில் சந்தானம் விஜய்யை பார்த்து இதற்கு பெயர் பழிவாங்குவதாப்பா என்று கேட்டது தான் நினைவுக்கு வந்தது கமல் சார்.

மதுமிதா

மதுமிதா

என்னை குள்ளம் என்று கலாய்த்தார்கள். சாண்டி மாஸ்டர் அனைவரையும் கலாய்க்கிறார். பதிலுக்கு யாராவது அவரை கலாய்த்தால் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை கிடையாது. இது குறித்து சாண்டியிடம் ஏன் நீங்கள் கேட்பது இல்லை என்றார் மதுமிதா. கமல் ஹாஸனையே தைரியமாக கேள்வி கேட்ட மதுமிதாவுக்கு பார்வையாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமல்

கமல்

கமல் ஹாஸன் சாண்டிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுமிதா கூறிய பிறகு கமல் ஹாஸன் போலிக் கோபத்துடன் சாண்டியிடம் கேள்வி கேட்டதை பார்வையாளர்கள் கவனிக்கத் தவறவில்லை. போட்டியாளர்கள் பற்றி கமலிடம் நிகழ்ச்சியாளர்கள் சரியான தகவல்களை அளிக்கவில்லை என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X