Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரீல் அந்து ரொம்ப நாளாச்சு: பாவம், பிக் பாஸுக்கு இது கூட தெரியல
Recommended Video
சென்னை: ரீல் அந்து போய் ரொம்ப நாளானது கூட தெரியாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து நேற்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். நாமினேட் செய்யப்பட்ட கவின் மற்றும் சாக்ஷி ஆகியோர் காப்பாற்றப்பட்டதை பார்த்து பார்வையாளர்கள் செம கடுப்பில் உள்ளனர்.
அந்த இரண்டு பேரும் இருந்தால் தானே முக்கோண காதல் கதையை ஓட்ட முடியும் என்று கணக்கு போட்டு காப்பாற்றியுள்ளார் பிக் பாஸ்.
'கர்ணன்' ஆகும் தனுஷ்.. யார் முதுகுல குத்தப் போறாங்கனு தெரியலை.. மாரிசெல்வராஜ்தான் பதில் சொல்லணும்!
முக்கோண காதல்
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அந்த முக்கோண காதல் கதையை பார்த்து கடுப்பாகாத பார்வையாளர்களே இல்லை. பல நேரம் யார், யாரை காதலிக்கிறார்கள் என்றே புரியவில்லை. நமக்கு மட்டும் இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸனுக்குமே என்னடா இந்த முக்கோண காதல் என்று கடுப்பாகத் தான் உள்ளது.
எரிச்சல்
பிக் பாஸுக்கு இம்முறை வேறு எந்த ஸ்க்ரிப்ட்டும் கிடைக்கவில்லை போன்று. அதனால் கவின், சாக்ஷி, லாஸ்வியாவை வைத்து முக்கோண காதல் கதையை வாரக் கணக்கில் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த கருமம்பிடித்த காதல் கதை பார்வையாளர்கள் யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. இப்படி முக்கோண காதல் கதை ரீல் அந்து போனது கூட தெரியாமல் அதையே ஓட்டிக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.
சமூக வலைதளங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் கருத்துகளை எல்லாம் கவனிக்கிறார்கள். அந்த கருத்துகளுக்கு ஏற்ப நிகழ்ச்சியில் சில மாற்றங்களும் செய்யப்படுகிறது. பிக் பாஸ் அரங்கில் இருக்கும் பார்வையாளர்களை நெட்டிசன்கள் திட்டியதை பார்த்த பிக் பாஸுக்கு முக்கோண காதல் கதை ரீல் அந்து போனது தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஆக, பார்வையாளர்களை கடுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே கவின், சாக்ஷி, லாஸ்லியாவையே மீண்டும் மீண்டும் காட்டுகிறார் போன்று.
தர்ஷன்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் முகென் ராவும், தர்ஷனும் சகோதரர்கள் போன்று பழகுவதை நாள் முழுக்க பார்ப்போம் ஆனால் இந்த கேவலமான முக்கோண காதலை பார்க்க முடியவில்லை என்று பார்வையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். வர, வர கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகியோரின் முகத்தை பார்க்கக் கூட பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. சீக்கிரமாக காட்சியை மாத்துங்க பிக் பாஸ், முடியல இப்பவே கண்ணை கட்டுது.