For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg Boss 3 எய்யா பிக் பாஸ், 'அந்த' வார்த்தையை மட்டும் மறுபடியும் சொல்லாதீங்கய்யா

    By Siva
    |

    சென்னை: அந்த வார்த்தையை மட்டும் நீங்கள் சொல்லாதீங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிக் பாஸ் 3 வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் இன்று இரவு வெளியேற்றப்பட உள்ளார். அந்த போட்டியாளர் பாத்திமா பாபு தான் என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.

    இந்நிலையில் பிக் பாஸுக்கு பார்வையாளர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

    மக்கள்

    மக்கள்

    மக்களாகிய நாம் வெளியேற்றப் போகும் அந்த போட்டியாளர் யார்? என்று கூறி தான் ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளனர். எந்த காலத்தில் பிக் பாஸ் மக்களை மதித்தார். மக்கள் மாஞ்சு மாஞ்சு ஓட்டு போட்டாலும் அதை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டிவிட்டு தனக்கு யாரை வெளியே அனுப்ப வேண்டுமோ அவரை தானே அனுப்புகிறார் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

    பார்வையாளர்கள்

    நீங்கள் யாரை வேண்டுமானாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள். ஆனால் தயவு செய்து, "மக்களாகிய நாம் வெளியேற்றப் போகும்" னு மட்டும் சொல்லாதீங்க என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருந்தால் பார்வையாளர்கள் கோபப்படத் தானே செய்வார்கள் பிக் பாஸ்.

    ஓட்டுகள்

    ஓட்டுகள்

    கடந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவை வெளியேற்ற பார்வையாளர்கள் ஓட்டு போட்டனர். ஆனால் பிக் பாஸோ தொடர்ந்து அவரை காப்பாற்றி ஓட்டு போட்டவர்களின் முகத்தில் கரியை பூசினார். அதனால் இந்த சீசனிலும் பிக் பாஸ் தில்லாலங்கடி வேலையை தான் செய்வார் என்பதில் பார்வையாளர்களுக்கு துளியும் சந்தேகமே இல்லை.

    கமல் ஹாஸன்

    இன்றைய ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கமல் ஹாஸனின் உடை பற்றியும் விமர்சித்துள்ளனர். மழை வராதா என்று சென்னைவாசிகள் காத்திருக்க கமல் சாரோ ரெயின்கோட் போட்டுட்டு வந்திருக்காரே என்கிறார்கள். மேலும் இன்று இரவு பாத்திமா பாபுவுக்கு பதில் சாக்ஷியை வெளியேற்றுமாறும் கமலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர் என்னப்பா செய்வார், பிக் பாஸ் யாரை சொல்கிறாரோ அவரை வெளியேற்றுவது தானே கமல் வேலை.

    English summary
    Bigg Boss 3 viewers have a request to the organizers of the TV reality show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X