கமலை தான் ஒன்னும் செய்ய முடியாது, இதையாவது செய்வீங்களா பிக் பாஸ்?
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை வீட்டில் இருந்து பார்ப்போர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சரவணன் தான் கல்லூரியில் படித்தபோது பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் சென்றதாக கமல் ஹாஸனிடம் பெருமையாக கூறினார். கமல் அதை கண்டிக்காமல் அரங்கில் இருந்தவர்களுடன் சேர்ந்து சிரித்தது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.
சரவணன் பேசியது குறித்து நெட்டிசன்கள் மூலம் அறிந்த பாடகி சின்மயி தொலைக்காட்சி சேனலை விளாசினார்.

சரவணன்
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் எத்தனையோ விஷயங்களை எடிட் செய்பவர்கள் சரவணன் பேசியதை ஏன் கட் பண்ணவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்ச்சையை கிளப்பி விளம்பரம் தேடும் வழக்கம் கோலிவுட்டில் தலை தூக்கி வரும் நேரத்தில் பிக் பாஸும் அதே வழியில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரச்சனை
பிக் பாஸ் நிகழ்ச்சி மொக்கை, கொடூர மொக்கை என்கிற கமெண்ட்டுகளை தான் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இந்நிலையில் தற்போது பலரும் சரவணனை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். சரவணன் பேசிய காட்சியை காண்பித்தால் சர்ச்சை ஏற்படும் என்று தெரிந்தும் காண்பித்துள்ளனர். முதலில் அந்த எடிட்டரை தூக்குங்க பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

கமல் ஹாஸன்
சரவணனை கமல் கண்டிக்கவில்லை என்பது வருத்தம் தான். ஆனால் பிக் பாஸ் அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களின் வீட்டுப் பெண்களிடம் யாராவது சரவணன் போன்று நடந்து கொண்டுவிட்டு அதை பெருமையாக கூறினால் இப்படித் தான் செய்வார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ்
வார இறுதி நாட்களில் பிக் பாஸ் அரங்கில் இருப்பவர்களை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது. எதற்கு கை தட்ட வேண்டும், எதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்கிற புத்தி கூட இல்லாமல் சோறு கிடைத்தால் போதும் என்று எதற்கெடுத்தாலும் சிரிக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கமலை மட்டும் வைத்து நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று வீட்டில் இருந்து நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பிக் பாஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது எல்லாம் நடக்கிற காரியமா?


Click it and Unblock the Notifications











