Bigg Boss 3: இந்த வாரம் யார் வெளியேறப் போறாங்கன்னு தெரிஞ்சிடுச்சு

By Siva

Recommended Video

Bigg Boss Meera Arrest : பணமோசடி வழக்கில் மீரா கைது- வீடியோ

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யாரை வெளியேற்றப் போகிறார்கள் என்பதை பார்வையாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஞாயிறு வந்தாலே பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். இதுவரை பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், நைனா மோகன் வைத்யா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் ப்ரொமோ வெளியிடும் முன்பே இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்துவிட்டது.

மீரா மிதுன்

மீரா மிதுன்

வனிதா விஜயகுமார் கிளம்பிச் சென்ற பிறகு கேமராக்களின் ஃபோகஸ் தன் மீது அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் மீரா மிதுன். எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது வில்லங்கமாக யோசித்து செய்கிறார். அவர் செய்யும் செயல்கள் அவருக்கு எதிராகத் திரும்பிவிடுகின்றன. இதனால் சக போட்டியாளர்கள் மட்டும் அல்ல பார்வையாளர்களும் மீரா மிதுனை வெறுக்கிறார்கள்.

தப்புக் கணக்கு

தப்புக் கணக்கு

பார்வையாளர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார் மீரா மிதுன். பிக் பாஸ் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் மீரா மிதுனை ஃபுல் டைமாக கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மீரா மிதுனின் உண்மையான முகம் இது தான் என்று கூறி சில வீடியோக்களை தேடிக் கண்டுபிடித்து ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 3

பிக் பாஸ் 3

மீரா மிதுன் பற்றி இது எல்லாம் தெரிந்த விஷயம் தானே. தற்போது எதற்காக அவரை பற்றி பேசுகிறோம் என்று நினைக்கலாம். இந்த வாரம் மீரா மிதுன் தான் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள் பார்வையாளர்கள். அதனால் தான் அவரை பற்றி பேச்சு. அவரை பிக் பாஸ் ஏன் வெளியேற்றுவார் என்பதற்கு ஒரு காரணமும் கூறுகிறார்கள்.

மோசடி வழக்கு

மோசடி வழக்கு

அழகிப் போட்டி நடத்தப் போவதாக கூறி பல பெண்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கு தொடர்பாக எழும்பூர் போலீசார் நேற்று பிக் பாஸ் வீட்டிற்கே சென்று மீராவிடம் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர். முன்னதாக குடும்ப பிரச்சனை காரணமாக வனிதாவிடம் விசாரிக்க போலீசார் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். அதன் பிறகே அவர் வெளியேற்றப்பட்டார். அதனால் வனிதாவை அடுத்து மீராவை தேடி போலீஸ் வந்ததால் அவர் தான் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X